ஆந்திராவில் பீதி கிளப்பும் ஆபரேஷன் கருடா... ரகசிய தகவல்களை வெளியிட்ட நடிகருக்கு கொலை மிரட்டல்!

Published : Nov 16, 2018, 10:24 AM IST
ஆந்திராவில் பீதி கிளப்பும் ஆபரேஷன் கருடா... ரகசிய தகவல்களை வெளியிட்ட நடிகருக்கு கொலை மிரட்டல்!

சுருக்கம்

ஆபரேஷன் கருடா குறித்த ரகசிய தகவல்களை கூறியதால், தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக தெலுங்கு திரைப்பட நடிகர் சிவாஜி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஆகையால் தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஆந்திர டிஜிபிக்கு நடிகர் சிவாஜி கடிதம் எழுதியுள்ளார்.

ஆபரேஷன் கருடா குறித்த ரகசிய தகவல்களை கூறியதால், தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக தெலுங்கு திரைப்பட நடிகர் சிவாஜி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஆகையால் தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஆந்திர டிஜிபிக்கு நடிகர் சிவாஜி கடிதம் எழுதியுள்ளார்.

 

தெலுங்கு திரைப்பட நடிகர் சிவாஜி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு தொடர்பாக ஒரு ரகசிய தகவலை வெளியிட்டார். இது தேசிய அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதில் ஆபரேஷன் கருடா என்ற ஆந்திர மாநில அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் திட்டம் வகுத்து வருவதாகவும் கூறினார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் உயிருக்கு ஆபத்து இல்லாத வகையில் தாக்குதல் நடத்தக்கூடும், சிபிஐ, பொருளாதார குற்றப்பிரிவு மூலமாக மாநில அரசுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாக சமீபத்தில் சிவாஜி தெரிவித்திருந்தார். 

அவர் கூறியது போல ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆந்திராவில் தெலுங்குதேச கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல் சம்பவமும் நடைபெற்றது. 

ஆபரேஷன் கருடா குறித்து தெலுங்கு திரைப்பட நடிகர் சிவாஜி முன்கூட்டியே எப்படி அறிந்தார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில் குடும்பத்தினருடன், அமெரிக்காவில் சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவாஜி ஆந்திர மாநில டிஜிபி ஆர்.பி.தாகூர், உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பாவிற்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஆபரேஷன் கருடா குறித்த தகவல்களை வெளிப்படுத்தியதால் தன்னுடைய உயிருக்கும், தனது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது தெரிவித்துள்ளார். மேலும்  அமெரிக்காவிலிருந்து வருகிற 21ம் தேதி ஐதராபாத் விமான நிலையம் வர உள்ளேன். எனவே எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"