சம்பளம் தராததால் தொழிலாளி ஆத்திரம்... பிரபல ஃபேஷன் டிசைனர் கொடூர கொலை

Published : Nov 15, 2018, 03:32 PM IST
சம்பளம் தராததால் தொழிலாளி ஆத்திரம்... பிரபல ஃபேஷன் டிசைனர் கொடூர கொலை

சுருக்கம்

வேலை செய்ததற்கு சம்பளம் தராததால் பிரபல ஃபேஷன் டிசைனர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதை தடுக்க வந்த உதவியாளரும் பலியானார். டெல்லியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலை செய்ததற்கு சம்பளம் தராததால் பிரபல ஃபேஷன் டிசைனர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதை தடுக்க வந்த உதவியாளரும் பலியானார். டெல்லியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியை சேர்ந்தவர் வந்தவர் மாலா லகானி (53). பிரபல ஆடை வடிவமைப்பாளர். பல்வேறு டிசைன்களில் ஆடைகளை வடிவமைத்து, விற்பனை செய்து வந்தார். இவரது நிறுவனத்தில் ராகுல் என்பவர் உள்பட சிலர் டெய்லர்களாக வேலை செய்து வருகின்றனர்.

 

மாலா லகானி வடிவமைத்து தரும் டிசைன்களில் டெய்லர்கள், துணிகளை தைத்து கொடுத்துள்ளனர்.  அதில் ராகுல்குமாருக்கு சரிவர சம்பளம் தரவில்லை என கூறப்படுகிறது. மேலும் அதுபற்றி கேட்டதற்கு, சரியாக வேலை செய்யவில்லை என மாலா லகானி கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று இரவு ராகுல்குமார் தனது நண்பர்கள் 2 பேருடன் மாலா லகானி வீட்டுக்கு சென்றார். அங்கு தனக்கு தரவேண்டிய சம்பளம் குறித்து பேசினர். இதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ராகுல், அவரது நண்பர்கள் சேர்ந்து மாலா லகானியை தாக்க முயன்றனர். இதை பார்த்ததும், மாலா லகானியின் உதவியாளர் பகதூர், அவர்களை தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பகதூரை  கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றனர். பின்னர் மாலா லகானியையும் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மாலா லகானி மற்றும் அவரது உதவியாளர் பகதூர் ஆகியோரை, ராகுல், அவரது நண்பர்கள் ரஹ்மத், பஷிர் ஆகியோர் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த 3 பேரையும் இன்று காலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"