எக்ஸ்ட்ரா சரக்கு கேட்டு குடிமகள் கலாட்டா… நடுவானில் பறந்த விமானத்தில் பரபரப்பு!

Published : Nov 14, 2018, 01:13 PM IST
எக்ஸ்ட்ரா சரக்கு கேட்டு குடிமகள் கலாட்டா… நடுவானில் பறந்த விமானத்தில் பரபரப்பு!

சுருக்கம்

நடுவானில் பறந்த விமானத்தில் கூடுதலாக சரக்கு கேட்டு பெண் ரகளை செய்தார். போதையில் விமான ஊழியர் மீது எச்சில் துப்பி தகராறு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் பறந்த விமானத்தில் கூடுதலாக சரக்கு கேட்டு பெண் ரகளை செய்தார். போதையில் விமான ஊழியர் மீது எச்சில் துப்பி தகராறு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில் இருந்து  ஏர் இந்தியா விமானம் கடந்த சனிக்கிழமை லண்டன் புறப்பட்டு சென்றது. இதில், ஐரிஷ் நாட்டு பெண் உள்பட ஏராளமானோர் பயணம் செய்தனர். பயணத்தின் போது அந்த பெண், மது குடித்துள்ளார். போதை தலைக்கேறியதும், கூடுதலாக சரக்கு கேட்டு ரகளை செய்தார். 2 ‘குவாட்டர்’ அளவுக்கு மதுபானத்தை விமான பணிப்பெண்கள் கொடுத்தனர். ஆனால் அதன் பிறகும் அந்த பெண், தொடர்ந்து வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

 

ஆனால், அதிக குடிபோதையில் இருந்ததால், அந்த பெண்ணுக்கு மது கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், விமான ஆண் ஊழியர் ஒருவரிடம் தகாரறில் ஈடுபட்டார். மேலும், அந்த ஊழியரின் இடத்துக்கே சென்று உடனடியாக தனக்கு மது தர வேண்டும் சத்தம் போட்டார். அப்போது, நான் ஒரு வழக்கறிஞர். சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்களுக்காக வாதாடுகிறேன். என்னை மதிக்காவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என கூறி திட்டினார். 

ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் நடவடிக்கைகள் எல்லை மீறியது. பின்னர், விமானி இருக்கும் பகுதிக்கு சென்ற பெண், அங்கு விமான ஊழியர் மீது எச்சிலை துப்பி, அவதூறாக பேசியுள்ளார். இதை பார்த்ததும், விமானத்தில் பயணம் செய்த சக பயணிகள், அதிர்ச்சியடைந்தனர். நடந்த சம்பவத்தை சிலர், தங்களது செல்போனில், படம் எடுத்தனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் அந்த பெண்ணுக்கு சமூகவலைதளங்களில் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"