பெண்கள் மட்டுமே பணிபுரியும் முதல் ரெயில் நிலையம்.....லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது

 
Published : Jan 10, 2018, 10:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
பெண்கள் மட்டுமே   பணிபுரியும் முதல் ரெயில் நிலையம்.....லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது

சுருக்கம்

Only women working railway station Mumbai Madunga

முற்றிலும் பெண்களே பணிபுரியும், இந்தியாவின் முதல் ரெயில் நிலையமான மும்பை, மாதுங்கா ரெயில் நிலையம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

பெண்கள் நிர்வாகம்

இந்தியாவின் மத்திய ெரயில்வேயின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் ெரயில் நிலையங்களில் மும்பையின் மாதுங்காவும் ஒன்று. மத்திய ெரயில்வேயின் பொது மேலாளரான சர்மாவின் முன் முயற்சியின் காரணமாக,கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ெரயில் நிலையமானது முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது.

பாதுகாப்பு படையினரில் தொடங்கி, வணிக ரீதியிலான அலுவல்கள் மற்றும் நிலையச் செயல்பாடுகள் என அனைத்திலும் முழுக்க மகளிரே ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக 41 பெண்கள் இந்த ெரயில் நிலையத்தை நிர்வகித்து வருகின்றனர்.

லிம்கா சாதனை

தற்பொழுது இந்த ெரயில் நிலையமானது ‘இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் ெரயில் நிலையம்’ என லிம்கா சாதனைப் புத்தகத்தில் 2018-ஆம் ஆண்டுப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தகவலை மத்திய ெரயில்வே துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த முடிவானது, மகளிர் மேம்பாடு மற்றும் முடிவெடுக்கும் திறனில் அவர்களது தனித்தன்மை ஆகியவற்றை

மேம்படுத்த உதவும் என்றும் அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!