"மீண்டும் வருகிறது ஒரு ரூபாய் நோட்டு" - விரைவில் ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது

Asianet News Tamil  
Published : Nov 04, 2016, 06:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
"மீண்டும் வருகிறது ஒரு ரூபாய் நோட்டு" - விரைவில்  ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது

சுருக்கம்

ஒரு ரூபாய் நாணயங்கள் தயாரிக்க தயாரிப்பு செலவு அதிகம் ஆகிறது. இதனால் மீண்டும் 1 ரூபாய் நோட்டுகளை தயாரித்து வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

ஒரு ரூபாய் நாணயங்கள் தயாரிக்க தயாரிப்பு செலவு அதிகமாவதால் , நாணயங்களை ஒழித்துவிட்டு மீண்டும் கரன்சி நோட்டுகளை தயாரிக்க உள்ளனர். ரிசர்வ் வங்கி புதிய ஒரு ரூபாய் கரன்சி நோட்டுகளை புழக்கத்தில் விட உள்ளது. 

புதிய நோட்டில் H. சின்னத்துடன் உட்பொதிந்த “L” எழுத்துடன் இருக்கும். புதிய ஒரு ரூபாய் நோட்டின்  நிறம் பெருவாரியாக முன்புறம் ரோஜா நிறத்துடன் இணைந்த பச்சையிலும் பின்புறம் மற்ற நிற கலவையிலும் இருக்கும். 

9.7 x 6.3 செ.மீ. அளவிலான இந்த நோட்டின் முன்புறத்தில் பாரத் சர்க்கார் என்ற வார்த்தைகள் Government of India என்ற வார்த்தைகளுக்கு மேல் இருக்கும். 

இந் நோட்டில் நிதித்துறை செயலர் ரத்தன் பி வட்டலின் இரண்டு மொழி கையெழுத்தும் இடம் பெற்றிருக்கும். 2016 – ம் ஆண்டு வெளியிடப்பட்ட சத்தியமேவே ஜெயதே – ன் வரிசை எண்கள் பகுதியில் பெரிய எழுத்தில் உட்பொதிந்த “L” என்ற ஆங்கில எழுத்தும் இருக்கும். நோட்டின் வலது கீழ்ப்புறம் எண்கள் கருப்பு வண்ணத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். 

புதிய நோட்டின் பின்புறத்தில் “பாரத் சர்க்கார்” என்ற வார்த்தைகள் “Government of India” உடன் 2016 என்ற வார்த்தைக்கு மேல் இருக்கும். ரூபாய் நாணத்தின் வடிவத்தை பிரதிபலிக்கும் வகையில் |             H. குறியீட்டுடன் பூக்களுடன் கூடிய வடிவமைப்பு இருக்கும். அதைச் சுற்றி எண்ணெய்த் துரப்பண ஆராய்ச்சி மேடை வடிவமான “சாகர் சாம்ராட்” டின் படமும் இருக்கும். இவற்றோடு ரூபாயின் மதிப்பானது உறுதியாக 15 இந்திய மொழிகளில், மொழிகளுக்கான முகப்பில் காட்டப்பட்டிருக்கும்.  மேலும் மையப்பகுதியின் கீழ்ப்புறம் சர்வதேச எண்ணில் ஆண்டு அச்சிடப்பட்டிருக்கும். 

புதிய நோட்டு புழக்கத்திற்கு வந்த பின்னரும் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள நாணயங்களும் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

PREV
click me!

Recommended Stories

Hostel Incident : தோழி சென்ற சில நிமிடங்களில்.. விடுதிக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ