
டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி முன்னாள் ராணுவத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷண் கிரேவால் திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய அரசு மீது ஏற்பட்ட விரக்தியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.