கத்தியைக்காட்டி பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்...!!!

Asianet News Tamil  
Published : Nov 04, 2016, 06:08 AM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
கத்தியைக்காட்டி பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்...!!!

சுருக்கம்

நொய்டாவில் செங்கல் சூளையில் பணியாற்றிக் கொண்டிருந்த 3 பெண்களை 6 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களை கொண்டு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளர்கள் மதிய வேளையில் அங்கிருந்த அறைகளில் ஓய்வெடுத்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல், 3 பெண்களை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அருகிலிருந்த மற்ற ஊழியர்களை, ஆயுதங்களைக் கொண்டு பணய கைதிகளாக பிடித்து வைத்திருந்தாகவும் கூறப்படுகிறது. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு முறையே 25, 30, 40 வயது மதிக்கத்தக்கவர்கள் ஆவார்கள்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan: விவசாயிகளுக்கு குட் நியூஸ்! அக்கவுன்ட்டுக்கு வந்தாச்சு ₹2000, இப்படி செக் பண்ணுங்க
டாடா குழுமத்திற்கு வந்த சோதனைய பார்த்தீங்களா..? வாடகைக்கு வந்த ரத்தன் டாடா வாழ்ந்த வீடு..