
மது அருந்த தண்ணீர் தர மறுத்ததால், அப்பாவின் கண் முன்னே மகனை துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் அரியனாவில் நடந்துள்ளது. கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரியானாவில் உள்ள மதுக்கடை ஒன்றிற்கு மகாபிர் மற்றும் அவரது மகன் நரேஷ் குமார் ஆகியோர் மது அருந்த சென்றுள்ளனர். ஏற்கனவே அந்த மது கடையில், 4 பேர் குடித்துக் கொண்டிருந்தனர்.
அந்த நான்கு பேரும், மகாபிர் மற்றும் நரேஷிடம் தண்ணீர் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். மகாபிரும், நரேஷம், ஒவ்வொரு முறை தண்ணீர் கேட்கும்போதும், தண்ணீர் இல்லை என்று கூறியுள்ளனர். இதன் பின்னர் அந்த நான்கு பேரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.
ஆனால், சிறிது நேரத்துக்குப் பிறகு, அந்த நான்கு பேரும் மீண்டும் மது கடைக்கு வந்துள்ளனர். அதில் ஒருவன், துப்பாக்கியை எடுத்து, நரேஷை சுட்டுள்ளான். குண்டு நரேஷின் கழுத்தில் பாய்ந்து அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, மது கடையின் உரிமையாளர், அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசர், நரேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கியால் சுட்ட அந்த நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்களில் இரண்டு பேரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் கொலைகாரர்களை கண்டுபிடித்துவிடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.