ஹோலி கொண்டாட்டத்தின்போது விபரீதம்! 9-வது மாடி பால்கனியில் இருந்து விழுந்தவர் பலி!

 
Published : Mar 04, 2018, 04:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
ஹோலி கொண்டாட்டத்தின்போது விபரீதம்! 9-வது மாடி பால்கனியில் இருந்து விழுந்தவர் பலி!

சுருக்கம்

One killed in Bangalore

ஹோலி கொண்டாட்டத்தின்போது, 9-வது மாடியில் நின்று கொண்டிருந்த மென்பொறியாளர் ஒருவர் நிலை தடுமாறி விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு அருகே உள்ள பெள்ளந்தூரைச் சேந்தவர் மென்பொறியாள்ர கௌதம். இவர் கடந்த வியாழன் தனது 5 நண்பர்களுடன் அன்று ஹோலி கொண்டாடினார். 

இந்த நிலையில் இரவு 11 மணியளவில் கௌதமுக்கு, அவரது பெற்றோர் போன் செய்துள்ளனர். இதற்காக கௌதம் பால்கனி நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பால்கனி சுவரில் சாய்ந்த அவர், நிலைத்தடுமாறி ஒன்பதாவது மாடிடியல் இருந்து கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்து பலத்த காயமடைந்த கௌதம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கௌதம் கீழே விழந்த 15 நிமிடங்களுக்குப் பிறகே அவரது நண்பர்களுக்கு விஷயம் தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கௌதமின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கௌதம்-ன் சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார். கௌதமின் மரணம் எதிர்பாராத விபத்தா? அல்லது கொலையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

டெல்லியில் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு! அடல் கேன்டீனில் தடபுடல் மெனு!
ஓட்டு போட்டா நிலம், தங்கம், தாய்லாந்து டூர்! புனே தேர்தலில் வேட்பாளர்களின் அதிரடி ஆஃபர்! வாக்காளர்கள் குஷி!