வெளுத்து வாங்கும் மழையால் ஓணம் கொண்டாட்டம் ரத்து!

Published : Aug 14, 2018, 02:45 PM ISTUpdated : Sep 09, 2018, 07:32 PM IST
வெளுத்து வாங்கும் மழையால் ஓணம் கொண்டாட்டம் ரத்து!

சுருக்கம்

கேரளாவில் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். 

கேரளாவில் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.  

கடந்த 2 நாட்களாக சற்று மழை குறைந்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் மிரட்டி வருகிறது கனமழை. இதனால் மீட்பு பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதால் இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்வதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக முதல்வர் கூறுகையில் கனமழை, வெள்ளம் மற்றம் நிலச்சரிவால் பெரும் பாதிப்புகளை கேரளா சந்தித்து வருகிறது. இதனால்  பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். வீடு, உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் ஓணம் பண்டிகையை அரசு சார்பில் வழக்கம் போல் கொண்டாடுவது சரியாக இருக்காது என்று தெரிவித்தார். எனவே இந்த ஆண்டு அரசு சார்பில் நடக்கும் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது என முதல்வர் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!