ஆண் வேஷம் போட்டு 7 வருஷமா பெண்ணை காதலித்த இளம் பெண்... திருமண நாளில் மாட்டிக்கொண்ட ருசிகர சம்பவம்...

 
Published : Jun 08, 2018, 11:23 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
ஆண் வேஷம் போட்டு 7 வருஷமா பெண்ணை காதலித்த இளம் பெண்... திருமண நாளில் மாட்டிக்கொண்ட ருசிகர சம்பவம்...

சுருக்கம்

On wedding day IT girl realises hubby is woman

ஆண் வேடத்தில் இருந்த இளம் பெண்ணை 7 வருடங்களாக இளம்பெண் ஒருவர் காதலித்த ருசிகர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில், ஸ்ரீராம் என்ற பெயரில் கொல்லத்தை சேர்ந்த ஒருவர் பணியாற்றி வந்தார். அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

இந்த காதல் 7 ஆண்டுகளை கடந்த நிலையில், ஸ்ரீராமிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இளம்பெண் கூறியுள்ளார். பின்னர் தனது காதல் குறித்து வீட்டிலும் எடுத்துக்கூறி, அவர் திருமணத்துக்கு சம்மதமும் வாங்கிவிட்டார். இவர்களது திருமணத்தை ஒரு கோவிலில் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் மணப்பெண்ணுக்கு, மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர் பேசுவதாக கூறி தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் அவர், ‘உன்னை காதலிக்கும் ஸ்ரீராம் ஆண் அல்ல; அவர் ஒரு பெண்’ என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அந்த இளம்பெண் உடனடியாக பெற்றோரிடம் விவரத்தை சொன்னார். இதனையடுத்து இந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றது. ஸ்ரீராம் என்ற பெயரில் காதலனாக வலம் வந்தவரையும், அவரை காதலித்த இளம்பெண்ணையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது, ஸ்ரீராம் என்ற பெயரில் ஆண் வேடத்தில் இருந்தவர், பெண்தான் என்பதும், அவர் அந்த இளம்பெண்ணிடம் நகை மோசடி செய்வதற்காக 7 ஆண்டுகளாக நாடகமாடி வந்ததும் தெரியவந்தது. இந்த விசாரணையை அடுத்து, கூறுகையில், ‘எனக்கு கடன் அதிகமாக இருப்பதால் அதனை அடைக்க வேறு வழி தெரியவில்லை. அதனால் ஆண் போல நடித்து ஒரு பெண்ணை திருமணம் செய்தால், அந்த பெண் வரதட்சணையாக கொண்டு வரும் நகையை ஏமாற்றி வாங்கி விற்று கடனை அடைக்க முடிவு செய்தேன். அதற்காக ஸ்ரீராம் என்ற பெயருடன் 7 ஆண்டாக அந்த பெண்ணை காதலிப்பது போல் நடித்து வந்தேன். நான் எதிர்பார்த்தது போன்று திருமணமும் எங்கள் இருவருக்குள் ஏற்பாடாகியது.

ஆனால், எப்படியும் சிக்கிக்கொள்வோம் என்று நினைத்து திருமணத்துக்கு முன்னதாகவே உண்மையை மணப்பெண்ணிடம் தெரியப்படுத்திவிட்டேன்’ என்று தெரிவித்து உள்ளார் அந்தப் பெண். இந்த விவகாரம் தொடர்பாக காதலித்த பெண் தரப்பில் புகார் எதுவும் போலீசாரிடம் அளிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சுமார் ஏழு வருடங்களாக ஒரு பெண் ஆணாக நடித்து தனியார் நிறுவனத்தில் பணி செய்தது எப்படி? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளம் பெண் ஒருவர் ஆணாக நடித்து இளம்பெண் ஒருவரை காதலித்து ஏமாற்ற முயன்ற இந்த ருசிகர சம்பவம் திருவனந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!