Tirupati:திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியன்று ஒரே நாளில் குவிந்த காணிக்கையால் புதிய சாதனை!

By Pothy RajFirst Published Jan 4, 2023, 1:18 PM IST
Highlights

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியன்று ஒரே நாளில் பக்தர்கள் வழங்கிய காணிக்கையால், முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியன்று ஒரே நாளில் பக்தர்கள் வழங்கிய காணிக்கையால், முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள வைணவத் திருத்தலங்களில் கடந்த 2ம்தேதியன்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் வைணவத் தலங்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும். அந்த வழியாகவே பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அந்த வகையில் வைகுண்ட ஏகாதசியன்றி திருமலை திருப்பதியில் வெங்கடாஜலபதியை தரிசிக்க 69,414 பேர் சொர்க்கவாசல் வழியாக ஒரேநாளில் சென்று வழிபாடு செய்துள்ளனர். அன்றைய தினம் அமைச்சர்கள், நீதிபதிகள், எம்எல்ஏக்கள்,தொழிலதிபர்கள், விஐபிக்கள் எனஏராளமானோர்வந்து தரிசனம் செய்தனர்.

வைகுண்டஏகாதசியன்று மட்டும் திருப்பதியில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.7 கோடியே 68 லட்சத்தை வழங்கியுள்ளனர். இதற்கு முன் கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி ரூ.6.31 கோடி காணிக்கை வந்ததே சாதனையாக இருந்தது, அதை தற்போது வைகுண்ட ஏகாதசியன்று முறியடித்துவிட்டது. 

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது 2 நாட்களில் 2வது முறையாக கல்வீச்சு

வைகுண்ட ஏகாதசியன்று வரமுடியாத பக்தர்கள், பிற நாட்களில் வெங்கடேஷ்வரரை தரிசிக்க சொர்க்கவாசல் வழியாக வரவேண்டும் என்பதற்காக தற்காலிகமாக சிறப்பு வாயிலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2020ம் ஆண்டுமுதல் அமைத்துள்ளது. 

இந்த வாயில் வழியாக வைகுண்ட ஏகாதசி முடிந்தபின் 10 நாட்களுக்கு பக்தர்களை அனுப்பவும் முடிவு செய்துள்ளது. இதன்படி இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதிமுதல் 11ம் தேதிவரை அந்த வாயில் வழியாக அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் நிரந்தர இடம்?

 இதன் மூலம் தினசரி 80ஆயிரம் பக்தர்கள் பெருமாளை தரிசக்க வழி செய்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

click me!