Rahul Gandhi Sonia Gandhi: ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் நிரந்தர இடம்?

Published : Jan 04, 2023, 10:49 AM IST
Rahul Gandhi Sonia Gandhi: ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் நிரந்தர இடம்?

சுருக்கம்

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நிரந்திரமாக இடம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நிரந்திரமாக இடம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலம் தலைவராக இருந்த சோனியா காந்தி, தனக்குப்பிந் தனது மகன் ராகுல் காந்தியை தலைவராக்கினார். ஆனால் கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகினார். 

என் சகோதரர் ராகுல் காந்தி போர் வீரர்! பாஜக அரசுக்கு அஞ்சமாட்டார்': பிரியங்கா காந்தி பெருமிதம்

அதன்பின் இடைக்காலத் தலைவராக இருந்த சோனியா காந்திக்கு கட்சிக்குள் மூத்த தலைவர்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியது. தேர்தல் நடத்த வேண்டும், புதிய தலைமை வரவேண்டும் என்று மூத்த தலைவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு தலைவராக மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குழுவில் மாற்றம் செய்யும்போது, எதிர்காலத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி பெயர் நீக்கப்படலாம் அல்லது வைக்கப்படலாம். இதைத் தடுக்கும் விதத்திலும், இரு தலைவர்களுக்கும் கட்சிக்குள் எப்போதும் முக்கியத்துவம்இருக்கும் வகையில் காரியக் கமிட்டியில் நிரந்தமான இடத்தை வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் வரும் 16, 17 தேதிகளில் கூடுகிறது

வரும் பிப்ரவரி 24முதல் 26ம் தேதி வரை காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குழுக் கூட்டம் நடக்க இருக்கிறது, அதில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை நியமனம் உறுதி செய்யப்படும். அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக்கான தேர்வும் நடக்கலாம் எனத் தெரிகிறது.  

இந்த உள்கட்சித் தேர்தலில் ராகுல் காந்தி, சோனியா காந்தி போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. தலைவர் பதவியிலிருந்து சோனியா காந்தி குடும்பத்தினர் விலகினாலும் கட்சிக்குள் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் உயரிய அதிகாரம் கொண்ட காரியக் கமிட்டியில் ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் நிரந்தரமான இடம் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

உள்கட்சித் தேர்தலை காங்கிரஸ் கட்சி கடந்த 20 ஆண்டுகளாக நடத்தவில்லை. ராய்ப்பூரில் பிப்ரவரி மாதம் நடக்கும் கூட்டத்தில் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.

உக்ரைனிடம் ரஷ்யாவின் அணுகுமுறையும் இந்தியாவிடம் சீனாவின் மிரட்டலும் ஒன்றுதான்: ராகுல் காந்தி விளக்கம்

காங்கிரஸ்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சிவேணுகோபால் கூறுகையில் “ ராய்பூரில் பிப்ரவரி மாதம் 3 நாட்கள் நட்ககும் கூட்டத்தில் அரசியல், பொருளதாரம்,சர்வதேச விவகாரங்கள், வேளாண்மை மற்றும் விவசாயிகள் பிரச்சினை, சமூக நீதி, அதிகாரமளித்தல், இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்புக் குறித்த பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவது குறிக்கு கட்சி விவாதித்து தீர்மானங்களை கொண்டுவரும்” எனத் தெரிவித்தார்


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!