omicron india : ஒமைக்ரான் வைரஸை எதிர்க்க கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியம்: என்ஐவி நிறுவனம் ஆய்வில் புதிய தகவல்

By Pothy Raj  |  First Published Apr 2, 2022, 11:05 AM IST

omicron india :கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் இரண்டையும் கலந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள், கோவிஷீல்ட் முதல் டோஸ், கோவாக்ஸின் 2-வது டோஸ் செலுத்தியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடித்த 6 மாதங்களில் நோய்எதிர்ப்புச் சக்தி வீரியம் குறைந்துவிடும் என்று புனேயில் உள்ள தேசிய வைரலாஜி நிருவனம்(என்ஐவி) தெரிவித்துள்ளது.


கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் இரண்டையும் கலந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள், கோவிஷீல்ட் முதல் டோஸ், கோவாக்ஸின் 2-வது டோஸ் செலுத்தியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடித்த 6 மாதங்களில் நோய்எதிர்ப்புச் சக்தி வீரியம் குறைந்துவிடும் என்று புனேயில் உள்ள தேசிய வைரலாஜி நிருவனம்(என்ஐவி) தெரிவித்துள்ளது.

ஆதலால், தடுப்பூசிமுழுமையாகச் செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்றும் ஆய்வில் தெரிவித்துள்ளது.

Latest Videos

undefined

புனேயி்ல் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் ஒமைக்ரான் குறித்தும் தடுப்பூசியின் அவசியம் குறித்தும் ஆய்வு நடத்தி, ஜர்னல்ஆஃப் டிராவல் மெடிசின் இதழில் வெளியிட்டுள்ளது. அதில் வைரலாஜி அறிவியல் வல்லுநர் மருத்துவர் பிரக்யா யாதவ் கூறியிருப்பதாவது:

6 மாதங்கள்

" கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தியவர்கள் மற்றும் இரண்டையும் கலந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள், கோவிஷீல்ட் முதல் டோஸ், கோவாக்ஸின் 2-வது டோஸ் செலுத்தியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடித்த 6 மாதங்களில் நோய்எதிர்ப்புச் சக்தி வீரியம் குறைந்துவிடும்

அதிலும், கோவிஷீல்ட் முதல் டோஸ், கோவாக்ஸின் 2-வது டோஸ் செலுத்தியவர்கள் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்திகள் டெல்டா வைரஸுக்கும், அதைத் தொடர்ந்து வந்த ஒமைக்ரானுக்கும் எதிராக சிறப்பாகச் செயல்பட்டன.

கலவை தடுப்பூசி

உத்தரப்பிரதேசத்தில் 18 பேர் முதல் டோஸ் தடுப்பூதியை கோவிஷீல்டாகவும், 2-வது டோஸ் தடுப்பூசியை கோவாக்ஸினாகவும் செலுத்தியிருந்தனர். இதேபோன்று 40 பேர் முதல் டோஸ் கோவிஷீல்ட் அல்லது கோவக்ஸினும், 2-வது டோஸ் கோவாக்ஸினும் அல்லதுகோவிஷீல்டும் செலுத்தியிருந்தனர்.

இந்த குழுக்களை தீவிரமாகக் கண்காணித்தோம், கடந்த ஜூன் மாதம் தீவிரமாக ஆய்வு செய்தோம், இதில் முதல் டோஸ் கோவிஷீல்ட்தடுப்பூசியும், 2-வது டோஸ் கோவாக்ஸினும் செலுத்தியவர்கள் உடலில் நோய்எதிர்ப்புக்சக்தி வீரியமாக இருந்தது. டெல்டா வைரஸ், அதைத்தொடர்ந்து ஒமைக்ரானுக்கு எதிராகவும் சிறப்பாகச் செயல்பட்டது.

கண்காணிப்பு

கொரோனா வைரஸும் டெல்டாவிலிருந்து உருமாற்றம் அடைந்து ஒமைக்ரானை நோக்கி நகர்ந்துவிட்டது. இந்த சூழலில் தடுப்பூசி செலுத்தியவர்கள் உடலில் 6 மாதங்களுக்குப்பின் நோய் எதிர்ப்புச் சக்தி அளவு குறைந்துவிடும். ஆதலால், நாம் புதியவகையான தடுப்பூசியை கண்டுபிடித்து செயல்படுத்துவது சிறந்தது. அல்லது பூஸ்டர் தடூப்பூசி செலுத்தவேண்டும். எங்கள் ஆய்வு குறித்து தற்போது அர்த்தமுள்ள விவாதங்கள் நடக்கின்றன. நம்முடைய குறிக்கோள் மீண்டும் வைரஸ் உருப்பெறாமல், தொற்று அதிகரிக்காமல் கண்காணிப்பதுதான்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் தடுப்பூசி கடந்த ஜனவரி 10ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. 12 வயதுமுதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மார்ச் 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது

click me!