ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய மாணவிகள்... வைரலான வீடியோ... அடுத்து என்ன ஆச்சு தெரியுமா?

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 01, 2022, 05:45 PM IST
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய மாணவிகள்... வைரலான வீடியோ... அடுத்து என்ன ஆச்சு தெரியுமா?

சுருக்கம்

மாணவிகளின் கொண்டாட்டத்தின் போது சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்த அங்கேயே காயமுற்ற சம்பவங்களும் அரங்கேறின. 

கேரளா மாநிலத்தில் தனியார் மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் சிலர் ஃபைன் ஆர்ட்ஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மமாணவிகளின் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், தற்போது மாணவிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. 

பைக் ரைடிங்:

சில தினங்களுக்கு முன் கேரளா மாநிலத்தின் தனியார் கல்லூரி மாணவிகள் ஒன்று சேர்ந்து சுமார் 30-க்கும் அதிக வாகனங்களில் பைக் ரைடிங் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. வைரல் வீடியோ கேரளா மாநில வாகன பதிவு துறை வரை சென்றடைந்துள்ளது. வைரல் வீடியோவை பார்த்து அதிர்ந்து போன ஆர்.டி.ஓ. பி.ஆர். சுமேஷ் மாணவிகள் அனைவருக்கும் ஒரே தண்டனை வழங்க முடிவு செய்தார். 

இதே போன்று கல்லூரி நிர்வாகத்தை அணுகிய சுமேஷ், கல்லூரியின் முதல்வரை சந்தித்து சம்பவம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவிகளின் செயல் பற்றி எடுத்துக் கூறியதோடு, அவர்கள் செய்த விதிமீறலுக்கு பொதுவான தண்டனை வழங்க முடிவு செய்து இருப்பதாகவும் தெரிவித்தார். மாணவிகள் தவறுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என கூறிய கல்லூரி முதல்வர் மாணவிகள் விவரங்களை வழங்கியதோடு, தண்டனையை ஏற்கவும் வலியுறுத்தினார். 

விழிப்புணர்வு வகுப்பு:

அதன்படி சாலையில் ஆபத்தான முறையில் பைக் ரைடிங் செய்த மாணவிகள் அனைவருக்கும் மூன்று மணி நேரத்திற்கு தொடர் விழிப்புணர்வு வகுப்பு எடுக்கப்பட்டது. இந்த பாடம் செவையூர் டெஸ்ட் கிரவுண்டில் நடைபெற்றது. விழிப்புணர்வு வகுப்பில், மாணவிகள் பொது சாலையில் எவ்வாறு வாகனம் ஓட்ட வேண்டும், என்ன தவறுகளை இழைக்கக்கூடாது, போக்குவரத்து விதிகள் என பல விஷயங்களை அறிந்து கொண்டனர். 

இந்த சாலை விழிப்புணர்வு வகுப்பு மார்ச் 30 ஆம் தேதி நடத்தப்பட்டது. இது மட்டுமின்றி ஹெல்மட் அணியாமல் பைக் மற்றும் ஸ்கூட்டர் ஓட்டி வந்த மாணவிகளுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. வைரல் வீடியோவில் ஸ்கோடா ஆக்டேவியா கார், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் என பல வாகனங்கள் காணப்பட்டன. மாணவிகளின் கொண்டாட்டத்தின் போது சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்த அங்கேயே காயமுற்ற சம்பவங்களும் அரங்கேறின. 

கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு பகுதியில் உள்ள மலபார் கிறிஸ்துவ கல்லூரியின் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் மாணவிகள் பைக், ஸ்கூட்டர், கார் கொண்டு கல்லூர் வளாகம் மற்றும் சாலைகளில் ஆபத்தான முறையில் ரைடிங் செய்தனர். இந்த சம்பவம் ஆர்.டி.ஓ. வரை சென்றதோடு, மாணவிகளுக்கும் தக்க பாடம் எடுக்கப்பட்டு இருக்கிறது. 

PREV
click me!

Recommended Stories

புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?