Electricity Bill Hike : ஷாக் நியூஸ்..! அதிரடியாக உயர்ந்த மின் கட்டணம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Published : Apr 02, 2022, 08:31 AM IST
Electricity Bill Hike : ஷாக் நியூஸ்..! அதிரடியாக உயர்ந்த மின் கட்டணம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

சுருக்கம்

2022-2023-ஆம் ஆண்டுக்கான ஆலோசனை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் ஆன்லைன் வாயிலாக கருத்து கேட்கப்பட்டது.

மின் கட்டணம் உயர்வு :

இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆண்டுதோறும் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மின் கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது 2022-2023 ம் ஆண்டுக்கான மின் கட்டணம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து காணொலியில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. 

அதிர்ச்சியில் பொதுமக்கள் :

பலரும் இக்கூட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு மற்றும் தனியார் நிலுவையில் வைத்துள்ள பல கோடி மின் கட்டண பாக்கியை வசூலிக்கவும் கோரினர். இதன்படி புதுச்சேரியில் வீட்டு உபயோக மின்கட்டணம் உயர்ந்துள்ளது.அதன்படி புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்ந்துள்ளது. 100 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ.1.55 ஆக இருந்த கட்டணம் 35 காசுகள் உயர்ந்து ரூ.1.90 ஆகவும், 101 யூனிட்டில் இருந்து 200 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ.2.60 ஆக இருந்த கட்டணம் 30 காசுகள் உயர்ந்து ரூ.2.90 ஆகவும் உயர்ந்துள்ளது. 

201 முதல் 300 யூனிட்டுக்குள் வரையிலான பயன்பாட்டிற்கு ஒரு யூனிட்டுக்கு 35 காசுகள் உயர்ந்து ரூ. 5 ஆகவும், 300 யூனிட்டுகளுக்கு மேலான பயன்பாட்டிற்கு, 40 காசுகள் உயர்ந்து ரூ. 6.45 ஆகவும் கட்டணம் உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து வர்த்தகம் மற்றும் விவசாய மின் கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் மின் வாரியத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?
இண்டிகோ விமானம் ரத்து.. திருமண வரவேற்பில் வீடியோ மூலம் கலந்துகொண்ட புதுமணத் தம்பதி!