Omicron : இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று... 400ஐ நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை!!

Published : Dec 24, 2021, 05:36 PM IST
Omicron : இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று... 400ஐ நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை!!

சுருக்கம்

இந்தியாவில் உள்ள 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 358 ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் உள்ள 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 358 ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வதேசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.


இருந்த போதிலும் கடந்த 2 ஆம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான், தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  122 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 17 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 88 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் 67 பேருக்கும், தெலுங்கானாவில் 38- பேருக்கும் ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 358 ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 114 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர். நாட்டில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டு தற்போது 244 பேர் சிகிச்சையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான ஒமைக்ரான் வழக்குகள் மகாராஷ்டிரா (88), டெல்லி (67), தெலங்கானா (38), தமிழ்நாடு (34), கர்நாடகா (31), குஜராத் (30), கேரளா (27), ராஜஸ்தான் (22) ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளன. ஹரியானா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், உ.பி., சண்டிகர், லடாக் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம்  தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட மாறுபாட்டின் ஒவ்வொன்றும் ஒன்று முதல் நான்கு வரை பதிவாகியுள்ளன. இன்று காலை சுகாதார அமைச்சகத்தின் தகவல் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் 122 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் ஒமைக்ரான் பரவல் ஒரே நாளில் மூன்றில் ஒரு பங்காக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒமைக்ரான் பரவல் 100ஐ கடந்திருந்த நிலையில் கடந்த 21ம் தேதியன்று ஒமைக்ரான் பரவல் 200ஐ தாண்டியது. இந்த நிலையில் தற்போது 300ஐ கடந்த ஒமைக்ரான் பாதிப்பு 400ஐ நெருங்குகிறது.

PREV
click me!

Recommended Stories

விசா தேதி முடிந்தால் தங்க முடியாதா? அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!
அவள் நரகத்துக்கே போகட்டும்.. நிதிஷ் குமாரின் செயலுக்கு ஆதரவாக பேசிய பாஜக தலைவர்!