Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. முதல்வர் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Mar 9, 2022, 10:29 PM IST
Highlights

மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.
சத்தீஸ்கர் தொழில்முறை தேர்வு வாரியம் மற்றம் சத்தீஸ்கர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் அனைத்து தொழில்முறை தேர்வுகளிலும், மாநிலத்தில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும்.

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட்டில் முதல்வர் பூபேஷ் பாகல் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையில் இன்று ரூ.1.04 லட்சம் கோடியில் 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் பூபேஷ் பாகல் தாக்கல் செய்தார். இதனையடுத்து, அவர் பேசுகையில்;- மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். சத்தீஸ்கர் தொழில்முறை தேர்வு வாரியம் மற்றம் சத்தீஸ்கர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் அனைத்து தொழில்முறை தேர்வுகளிலும், மாநிலத்தில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும்.

ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு

இதுதவிர, மாவட்ட பஞ்சாயத்து, ஜன்பத் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து ஆகிய பஞ்சாயத்து அமைப்புகளின் பிரதிநிதிகளின் மதிப்பூதியம் மற்றும் அலவன்ஸ் உயர்த்தப்படும். ஆட்கடத்தல் சம்பவங்களைத் தடுக்க மாநில அளவில் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்கப்படும். லஞ்ச ஒழிப்பு மற்றும் குறைதீர்ப்பு பிரிவு அமைக்கப்படும்.

மொத்த நிகரச் செலவு ரூ.1,04,000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய் செலவினம் 88,372 கோடியாகவும், மூலதனச் செலவு 15,241 கோடியாகவும் உள்ளது, இது மொத்த செலவில் 14.6 சதவீதம் ஆகும். மாநிலத்தின் மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.14,600 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது என முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். 

click me!