மோடி அறிவித்த 2000 ரூபாய் நோட்டை கையால் தொடாத மனிதர் !! பாதி மீசையுடன் வாழும் வைராக்கியம்…

By Selvanayagam PFirst Published Aug 22, 2018, 10:25 AM IST
Highlights

பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பெரிதும் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தான் வைத்திருந்த 23 ஆயிரம் ரூபாயை எரித்ததோடு  பாதி மீசை, பாதி தலையை மழித்துக் கொண்டு இந்த ஆட்சி முடிவுக்கு வந்த பின்புதான் தலைமுடியையும், மீசையையும் வளர்ப்பேன் என வைராக்கியமாக வாழ்ந்து வருகிறார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடைக்கல் என்ற கிராமத்தில் வசித்து வரும் முதியவர்  இனிகா. டீ மற்றும் பரோட்டா கடை வைத்திருக்கும் அவர் அப்பகுதியில் நைட்டி மாமா என பெயர் பெற்றவர்.

ஏனென்றால் அவர் சற்று வித்தியாசமாக பெண்கள் அணியும் நைட்டியை அணிந்துள்ளார். ஒரு முறை அவரது கடைக்கு எஸ்.ஐ. ஒருவர் வந்திருக்கிறார். அப்போது தனக்கு மரியாதை கொடுக்காமல் இனிகா  தான் அணிந்திருந்த லுங்கியை ஏன் இறக்கி கட்டவில்லை என கூறி அந்த எஸ்.ஐ. அடித்திருக்கிறார்.

அன்று முதல் லுங்கி கட்டாமல் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் நைட்டியை மட்டுமே உடுத்தி வருகிறார்.. பல முறை அவரை வேஷ்டி அணியச் சொல்லி வற்புறுத்தியும் அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.

இதே போல் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது இனிகா  கையில் 23 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. அதை  இனிகா வங்கிக்குச் சென்று மாற்ற முயன்றுள்ளார். ஆனால் வரிசையில் நின்றபோது மயங்கி விழுந்துவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த இனிகா தான் வைத்திருந்த 23 ஆயிரம் ரூபாயை தீயில் இட்டு எரித்துவிட்டார்.

தொடர்ந்து தனது மீசையை ஒரு புறமும், தலையில் பாதியையும் மழித்துவிட்டு மோடி ஆட்சி முடிவுக்கு வரும்போது தான் மீசையையையும், தலைமுடியையும் வளர்ப்பேன் என வைராக்கியமாக வாழ்ந்து வருகிறார்.

அதே நேரத்தில் இவரது நல்ல மனதுக்கு ஒரு உதாரணத்தையும் சொல்ல வேண்டும், இவர் தனது சிறிய கடையில் மதியம் 10 ரூபாய்க்கு பொது மக்களுக்கு சாப்பாடு போடுகிறார். 50 ரூபாய்க்கு நல்ல சிக்கன் வருவல் விற்பனை செய்கிறார்.

10 ரூபாய் சாப்பாடு என்பது அன்லிமிடெட். ஆனால் யாராவது சாதத்தை மிச்சம் வைத்தால் அவரிடம் 50 ரூபாய் பைன் வாங்கிவிடுவார். இதனால் அந்தப் பகுதியில் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது.

click me!