எதிரிகளிடம் உஷாரா இருங்க... 70 வருஷ பழக்கம் ஈஸியா போகாது... காங்கிரஸை பொளந்து கட்டிய பிரதமர் மோடி!

Published : Dec 05, 2023, 09:37 PM ISTUpdated : Dec 05, 2023, 09:44 PM IST
எதிரிகளிடம் உஷாரா இருங்க... 70 வருஷ பழக்கம் ஈஸியா போகாது... காங்கிரஸை பொளந்து கட்டிய பிரதமர் மோடி!

சுருக்கம்

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று டவிட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில், "மக்கள் தங்களைப் பிளவுபடுத்தும் எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்றும் "70 வருடம் பழமையான பழக்கத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியாது" என்றும் கூறி வழக்கம்போல காங்கிரஸ் கட்சியை பெயர் குறிப்பிடாமல் விளாசி இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று டவிட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில், "மக்கள் தங்களைப் பிளவுபடுத்தும் எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்றும் "70 வருடம் பழமையான பழக்கத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியாது" என்றும் கூறி வழக்கம்போல காங்கிரஸ் கட்சியை பெயர் குறிப்பிடாமல் விளாசி இருக்கிறார்.

ஆங்கில செய்தி சேனல் ஒன்றின் வீடியோவுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்தப் பதிவை எழுதியுள்ளார். இந்தி ஹார்ட் லேண்ட் என்றும் இந்தி பெல்ட் என்றும் குறிப்பிடப்படும் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு, அங்கு உள்ள மக்கள் தவறான காரணங்களுக்காக வாக்களித்தது தான் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்துகளைத் தொகுத்துக் கூறுகிறார்.

பாஜகவுக்கு 2 நாள் முன்பே தேர்தல் முடிவுகள் தெரிந்துவிட்டது: திக்விஜய் சிங் குற்றச்சாட்டு

இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, "அவர்கள் தங்கள் ஆணவம், பொய்கள், அவநம்பிக்கை மற்றும் அறியாமையை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கட்டும். ஆனால்... அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி குறித்து ஜாக்கிரதையாக இருங்கள். 70 வருடம் பழமையான பழக்கத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியாது. இன்னும் பல அழிவுகளுக்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும்" என்று கூறியுள்ளார்.

வழக்கத்துக்கு மாறாக பிரதமர் மோடி தனது இந்தப் பதிவில் எமோஜிகளையும் அதிகமாக பயன்படுத்தி இருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றி சமூக ஊடகங்களில் பலவிதமான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. பாஜகவின் ஆதரவாளர்கள் கட்சியின் வெற்றியைப் பாராட்டுகின்றனர். பாஜக எதிர்ப்பாளர்கள், இந்தத் தேர்தல் முடிவுகள் இந்தி பேசும் மாநிலங்களில் உள்ளவர்கள் தவறான காரணங்களுக்காக பாஜக ஆதரிப்பதாகக் கூறுகின்றனர்.

இப்போது, ​​பிரதமர் மோடி, "இன்னும் பல அழிவுகளுக்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்" என்று கூறியிருப்பது, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில்போது பாஜக மேலும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்ளப் போகிறது என்பதற்கு அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.

கோ மூத்திர மாநிலங்களில் தான் பாஜக ஜெயிச்சுருக்கு! திமுக எம்.பி. செந்தில் குமார் சர்ச்சை பேச்சு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சூடானில் மரண ஓலம்.. பள்ளியில் கொடூர தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 116 பேர் பலி
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு! சிறப்பு விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!