பழைய 10000 ரூபாய் வைத்திருந்தால் 50000 ரூபாய் அபராதம்….மோடியின் அடுத்த அதிரடி….

Asianet News Tamil  
Published : Dec 26, 2016, 10:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
பழைய 10000 ரூபாய் வைத்திருந்தால் 50000 ரூபாய் அபராதம்….மோடியின் அடுத்த அதிரடி….

சுருக்கம்

பழைய 10000 ரூபாய் வைத்திருந்தால் 50000 ரூபாய் அபராதம்….மோடியின் அடுத்த அதிரடி….

செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரூ. 10 ஆயிரத்துக்கு அதிகமாக கையில் வைத்து இருந்தாலோ அல்லது பரிமாற்றம் செய்தாலோ, பெற்றாலோ அவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க அவசரச் சட்டத்தை மத்தியஅரசு கொண்டு வருகிறது.

நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் வங்கிகள், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் விதித்தன.

மேலும், மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் தங்கள் கணக்குகளில் டெபாசிட் செய்ய இம்மாதம் 30-ந்ததேதி வரைஅவகாசம் கொடுத்தது.

மத்தியஅரசு ரூபாய் நோட்டு தடை அறிவிப்பை கொண்டு வரும் போது, ரூ.500, ரூ.1000 நோட்டுகளும் ஏறக்குறை ரூ. 15.44 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தன. இந்த அறிவிப்பு வெளியாகி ஏறக்குறைய 46 நாட்களில் வங்கிகளுக்கு ரூ.13 லட்சம் கோடி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. மத்தியஅரசின் காலக்கெடு முடிய இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், புதிய அவசரச் சட்டத்தை கொண்டு வரமத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.

அதாவது, செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ந்தேதிக்கு பின், ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் மக்கள் வைத்து இருந்தாலோ அல்லது வங்கியில் டெபாசிட்செய்தாலோ அல்லது பரிமாற்றம் செய்தாலோ அல்லது பெற்றாலோ அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

அதாவது, தனிநபர் ஒருவர் ரூ.500, ரூ.1000 நோட்டுகளா அதிகபட்சமாக 10 எண்ணிக்கையில் மட்டுமே வைத்திருக்க முடியும். அதன்மதிப்பு ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமல் இ ருக்க வேண்டும். 
 இதற்கான அவசரச் சட்டத்தை  அரசு வரும் 30-ந்தேதிக்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

அவ்வாறு கொண்டு வரப்படும் அவசரச்சட்டத்தை மதிக்காத நபர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என அரசு ஆலோசித்து வருகிறது. அதாவது, ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருப்பு என்ன வைத்து இருக்கிறார்களோ அந்த தொகையின் 5 மடங்கு தொகையை அபராதமாக விதிக்கலாம் அல்லது குறைந்தபட்சம் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்தியஅரசுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் எது அதிகமோ அது நடைமுறைப்படுத்தப்படலாம். இந்த சட்டத்தை மீறும் நபர்கள் மீது தொடரப்படும் வழக்குகள் குற்றவழக்காகக் கருதி, முனிசிபல்மாஜித்திரேட் நீதிபதி விசாரணை செய்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிசர்வ் வங்கியில் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டு இருந்தபோதிலும், அந்த தேதி குறித்து மறுஆய்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

 

PREV
click me!

Recommended Stories

Asha Bhosle passes away: 120000 ஹிட் பாடல்கள்.. பிரபல பின்னணி பாடகி ஆஷா போஷ்லே காலமானார்..!
சென்னை டூ பெங்களூரு வெறும் 2 மணி நேரம் தான்! மணிக்கு 220 கி.மீ வேகம்.. கெத்தாக களமிறங்கும் புதிய ரயில்!