கர்நாடகாவில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆட்டோ சேவைகளுக்கு தடை… அம்மாநில அரசு அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published Oct 7, 2022, 6:51 PM IST
Highlights

அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ போன்ற ஆட்டோ சேவைகளுக்கு கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ போன்ற ஆட்டோ சேவைகளுக்கு கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி, சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் மக்கள் பெரிதும் பயன்படுத்தும் ஆட்டோ சேவைகளில் மிகவும் பிரபலமானவை ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ. இந்த நிறுவனங்களின் செயலிகள் மூலம் நமக்கு வேண்டிய இடங்களுக்கு செல்லும் வசதி உள்ளதால் மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இதில் மக்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனை சேவைகளுக்கான விலை. சாதாரண நாட்களில் ஒரு கட்டணமும், விழாக்காலங்களில் ஒரு கட்டணமும், இரவு நேரங்களில் ஒரு கட்டணமும், மழை காலங்களில் ஒரு கட்டணமும் என நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி சேவைக் கட்டணங்களை நிர்ணயித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வெறும் 25 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்திய விமானப்படை .. உலகில் 4வது வலிமையான படையாக தலைநிமிர்ந்து நிற்கிறது.

இதுக்குறித்து பயணர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதத்தில் இவ்வாறு குறைந்த தொலைவிற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் குவிந்தன. குறிப்பாக கர்நாடகாவில் இதுப்போன்று 292 புகார்கள் வந்துள்ளன. இதை அடுத்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு, அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், அடுத்த மூன்று நாட்களுக்குள் ஓலா, உபர், ரேபிடோ போன்ற செயலிகள் மூலம் செயல்படும் ஆட்டோக்களுக்கு மட்டும் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான அமெரிக்கத் தூதரின் வருகையில் ஆட்சேபனை உள்ளது… மத்திய அரசு கருத்து!!

மேலும் அந்த அரசாணையில், அடுத்த மூன்று நாட்களுக்குள் செயலிகள் தங்களின் சேவையை நிறுத்திக் கொள்வதோடு மட்டும் இல்லாமல், ஆட்டோக்களில் அரசு நிர்ணயித்த தொகையினை விடவும் அதிக கட்டணங்கள் செலுத்தி பயணிக்க வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இது ஆட்டோ சேவை நிறுவனங்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு 30 ரூபாயும் அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 15 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும் என அரசு கட்டணம் நிர்ணயித்திருந்த நிலையில் கர்நாடகாவில் 2 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிற்கு 100 ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அம்மாநில அரசு இத்தகைய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

click me!