
யார் இந்த வி.கே. பாண்டியன்?
தமிழரான வி.கே பாண்டியன் ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜு ஜனதா தளத்தின் உறுப்பினர் ஆவார். கடந்த 1999ம் ஆண்டு ஐஏஎஸ் முடித்த பாண்டியன், முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகவும், ஒடிசா அரசின் முதல்வரின் மாற்றம் மற்றும் முயற்சிகளின் செயலாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023ம் ஆண்டு தான் அவர் பிஜு ஜனதா தளத்தின் உறுப்பினராக பணியாற்ற துவங்கினார், அப்போதிலிருந்தே அவர் மீது இது போன்ற சம்பவங்கள் நடப்பது ஒரு வழக்கமாகிவிட்டது என்றே கூறலாம். அம்மாநில ஊடகங்கள் அளித்த தகவலின்படி சம்பவத்தின்போது, தனது கட்சி சார்ந்த ஒரு நிகழ்வில் பங்கேற்க சென்றுள்ளார் பாண்டியன்.
ஜம்மு-காஷ்மீர் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர்!
இந்நிலையில் பாண்டியன் மீது தக்காளியை வீசிய அந்த இளைஞர், மேலும் அந்த இளைஞர் ஒரு காங்கிரஸ் தொண்டர் என்றும், பெல்லகுந்தா தொகுதியை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக பிஜேடி (BJD) மற்றும் 5டி தலைவர் வி.கே.பாண்டியனின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று அவர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் இச்சம்பவத்தையடுத்து, போலீசார் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சில பிஜேடி தொண்டர்கள், காவல்துறை முன்னிலையில் அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கிடைத்த தகவல்களின்படி, பாண்டியன் பெல்லகுண்டாவில் நடந்த "அமா ஒடிசா நபி ஒடிசா" நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டார்.
காலை 11.30 மணியளவில் பாண்டியன் மேடைக்கு வந்தபோது, அந்த இளைஞர் தக்காளியை வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த இளைஞரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்குப் பிறகும் அந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்துள்ளது. பாண்டியன் தனது உரையில், "முட்டை, தக்காளி மற்றும் மை என்று எதனால் தாக்கப்பட்டாலும் ஒடிசா மக்களுக்கு சேவை செய்வேன்" என்று கூறினார். ஆனால், இந்த சம்பவம் குறித்து காங்கிரஸிடம் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை.
ஆணுறையில் அரசியல் கட்சிகளின் சின்னம்! ஆந்திராவில் வெற லெவலில் நடக்கும் தேர்தல் பிரச்சாரம்!