
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ் மகள் மிசா பாரதியின் வீட்டில் சோதனை நடத்ததைதொடர்ந்து, அவருக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
1991 முதல் 1993 வரை பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் லாலு பிரச்சாத் யாதவ். மேலும் 2006 ல் ரயில்வேத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
லாலுபிரசாத் முதலமைச்சராக இருந்தபோது மாட்டுதீவனம் வாங்கியதில் ஊழலில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டு சிறைக்கு சென்றார்.
பின்னர், ஜாமினில் வெளியே வந்த அவர் மீது பினாமி பெயரில் சொத்து சேர்த்ததாக குற்றசாட்டு எழுந்து புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர், டெல்லியில் உள்ள அவரது மகள் மிசா பாரதியின் பண்ணை வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்நிலையில், அமலாக்கத்துறையினர் இன்று லாலுபிரசாத் மகள் மிசா பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.