பிரதமர் மோடியை தனிப்பட்ட ரீதியில் சவுகிதார் சோர் ஹெய் என்று ராகுல் காந்தி விமர்சித்தது காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் விரும்பவில்லை என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
பிரதமர் மோடியை தனிப்பட்ட ரீதியில் சவுகிதார் சோர் ஹெய் என்று ராகுல் காந்தி விமர்சித்தது காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் விரும்பவில்லை என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகஇருந்து பணியாற்றிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடந்த வாரம் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர், அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகினார். காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திய கடுமையாக விமர்சித்த குலாம் நபி ஆசாத், கட்சியிலிருந்துவிலக ராகுல் காரணம் என்று பழியிட்டார்.
ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, அங்கு சொந்தக் கட்சி தொடங்கப்போவதாகவம்,பாஜகவில் சேரமாட்டேன் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
இந்நிலையில் குலாம் நபி ஆசாத் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
chitradurga: சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்: கர்நாடக முருகா மடாதிபதி சிக்கினார்: போக்ஸோவில் வழக்கு
காங்கிரஸ் கட்சி 2வது முறையாக மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தபின், ராகுல் காந்தி தனது தலைவர் பதவியிலிருந்து விலகினார். அப்போது மூத்த தலைவர்கள் கட்சிக்குள் தனது செயல்பாட்டுக்கு எதிராக இருப்பதால், தொடர்ந்து தலைவராக நீடிக்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்தார்.
அதுமட்டுமல்லால் பிரதமர்மோடியை தனிப்பட்ட ரீதியில் ராகுல் காந்தி விமர்சித்ததையும் மூத்த தலைவர்கள் விரும்பவில்லை. மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, மூத்ததலைவர்கள் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோனி, ப.சிதம்பரம்,நான் ஆகியோர் இருந்தோம். அப்போது ராகுல் காந்தி கைகளை கோர்த்துக்கொண்டு கோஷமிடுவோம் என்றார்.
திடீரென பிரதமர் மோடிக்கு எதிராக சவுதிகார் சோர் ஹெய் என்று ராகுல் காந்தி கோஷமிட்டார். நான் நாற்காலியிலேயே அமர்ந்துவிட்டேன். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் காலத்தில் முதல்வர்களாக, மத்திய அமைச்சர்களாக இருந்த மூத்த தலைவர்கள் பலர் ராகுல் காந்தி கூறிய கோஷத்தை எவ்வாறு அந்த தலைவர்கள் பொதுவெளியில் உச்சரிப்பார்கள்.
எதிர்க்கட்சியில் இருக்கும் ஒரு அரசியல்தலைவரை தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் நடத்துவது என்னைப் போன்ற அரசியல்வாதி நினைத்துக்கூடபார்க்கமாட்டார். நாங்கள் இந்திரா காந்தியிடம் இருந்து அரசியல்பாடம் கற்றோம்.
நான் முதன்முதலாக அமைச்சராக இருந்தபோது, இந்திரகாந்தி என்னையும், எம்எல் போடேதாரையும் அழைத்து அடல் பிஹாரி வாஜ்பாயிடம் பேசக் கூறினார்கள். அப்போதுதான் ஒரு தலைவருக்கும், மற்றொரு தலைவருக்கும் இடையிலான வேறுபாடு தெரியும் என்றார்.
வாஜ்பாயும் சிறந்த அரசியல்தலைவர், நாம் செய்யநினைக்கும் அதே மக்கள் பணியைத்தான் அவரும் விரும்புகிறார். என்னிடம் அவர் பேச தயங்குகிறார். ஆதலால்நீங்கள்அவரிடம் பேசுங்கள் என்றார். எதிர்கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவருடன் பேசும் போது சரிசமமான மரியாதை அளிக்க வேண்டும், நமது தலைவர்களை மதிக்க வேண்டும் என்பது புரிந்தது.
பொதுவெளியில் எங்கள் பிரதமர் திருடன் என்று சத்தம் போடுவதற்கு நாங்கள் அரசியல் பாடம் கற்கவில்லை
இவ்வாறு குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்