gulam nabi azad: காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக எப்போது வேண்டுமானாலும் வீழும்: குலாம் நபி ஆசாத் விளாசல்

By Pothy RajFirst Published Aug 29, 2022, 4:42 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சிக்குத் தேவை இப்போது வாழ்த்துக்களைவிட, மருந்துதான் தேவை என்று குலாம் நபி ஆசாத் காட்டமாகத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிக்குத் தேவை இப்போது வாழ்த்துக்களைவிட, மருந்துதான் தேவை என்று குலாம் நபி ஆசாத் காட்டமாகத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகஇருந்து பணியாற்றிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடந்த வாரம் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர், அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகினார். காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திய கடுமையாக விமர்சித்த குலாம் நபி ஆசாத், கட்சியிலிருந்துவிலக ராகுல் காரணம் என்று பழியிட்டார். 

Latest Videos

நீட் கலந்தாய்வுக்கு தடை இல்லை.! திட்டமிட்டபடி தொடங்குகிறது முதுகலை நீட் கவுன்சிலிங் !

ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, அங்கு சொந்தக் கட்சி தொடங்கப்போவதாகவம்,பாஜகவில் சேரமாட்டேன் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். 
இந்நிலையில் குலாம் நபி ஆசாத் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

மாநிலங்களில் இருந்து முன்னிறுத்தப்படும் தலைவர்கள் கட்சியின் உறுப்பினர்களை ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக அவர்களை வெளியேற்றும் வகையில் செயல்படுகிறார்கள். நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட்டேன். அதற்காக பாஜகவில் சேரமாட்டேன். ஜம்மு காஷ்மீரில் பாஜகவில் சேர்ந்து நான் செய்யும் அரசியல் அங்கு பயன்படாது. 

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். ஆதலால், அங்கு புதிய கட்சியைத் தொடங்கப் போகிறேன். காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். இப்போதுள்ள சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகளைவிட, மருந்துதான் தேவை. ஆனால், அந்த மருந்துகளை மருத்துவர்கள் வழங்குவதற்குப் பதிலாக, கம்பவுண்டர்கள் வழங்குகிறார்கள்.

chitradurga: சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்: கர்நாடக முருகா மடாதிபதி சிக்கினார்: போக்ஸோவில் வழக்கு

காங்கிரஸ் கட்சியில் சரியான விஷயங்களை செய்ய கட்சியின் தலைமைக்கு நேரமில்லை. மாநிலங்களில் பதவி பெற்ற தலைவர்கள் மக்களை ஒருங்கிணைக்காமல் கட்சியை விட்டு வெளியேறச் செய்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் அடித்தளம் பலவீனமாகமாறிவிட்டது. அமைப்புரீதியாக எப்போதுவேண்டுமானாலும் சரியலாம். அதனால்தான் முக்கியத் தலைவர்கள் வெளியேறிவருகிறார்கள். 

இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்

click me!