பட்டாசு வெடிக்கலாமாம் ஆனா புகை மட்டும் வரக்கூடாதாம்! அமைச்சரின் சீரியஸ் காமெடி...

First Published Oct 16, 2017, 7:14 PM IST
Highlights
no smoke crakers...minister give new idea


சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத, காற்று மாசுபடாத, புகையை உருவாக்காத பட்டாசுகளை கண்டுபிடிக்கும்படி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வித்தியாசமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் உண்மையிலேயே இப்படி சொன்னாரா? அல்லது காமெடி செய்தாரா என்று பொது மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

டெல்லியில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசு வெடித்ததில் நகரம் முழுவதும் மாசு உண்டாகி பொது மக்கள் மூச்சுவிடமுடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு  இந்த ஆண்டு டெல்லியில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடைவிதித்தது.

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் துறை சார்பில், டெல்லியில் தூய்மையான காற்றுக்கான பேரணி நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் ஹர்ஷ வர்தன், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத, காற்று மாசுபடாத, புகையை உருவாக்காத பட்டாசுகளை கண்டுபிடிக்கும்படி வித்தியாசமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இந்தியாவின் மிக முக்கியமான நகரமான டெல்லி உலகின் உள்ள மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது. மேலும் மிகவும் மோசமாக மாசு அடைந்த நகரங்களின் பட்டியலிலும் டெல்லி தவறாமல் இடம்பெற்றுவிடும். தீபாவளி போன்ற சமயங்களில் டெல்லியில் இருக்கும் மாசுக்கள் அளவு அதிகமாகி கட்டுப்படுத்த முடியாத அளவையும் தாண்டி செல்கிறது. இதையடுத்து டெல்லியில் தீபாவளி கொண்டாட்டங்களின் காரணமாக இன்னும் மாசுபட வாய்ப்பு இருந்தது என அமைச்சர் தெரிவித்தார்..

டெல்லியின் சுற்றுச் சூழல் மிகவும் மோசமடைவதை தடுக்கும்  வகையில்  இந்த ஆண்டு  தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என  உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்தத் தீர்ப்பை மிகவும் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இந்தத் தீர்ப்பு சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. பலரும் இந்த தீர்ப்புக்கு ஆதரவாகவும் , எதிராகவும் பேசினார். இந்த நிலையில் மத்திய சுற்றுச்சுழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்  இந்த வித்தையாசமான கருத்தை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் ஏற்பட்டுள்ள மாசு குறித்து பேசிய ஹர்ஷ் வர்தன்  டெல்லியில் அதிக அளவில் மாசு ஏற்பட்டுள்ளதால் அங்கு பட்டாசு வெடிக்க தடை உள்ளது. இனி வரும் காலங்களில் இப்படி தடை இல்லாமல் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றால் மாசு ஏற்படுத்தாத பட்டாசை தான் உருவாக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி மாணவர்களும், அறிவியலாளர்களும் மாசு ஏற்படுத்தாத பட்டாசை உருவாக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

 

click me!