துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசுடன் நிதிஷ் கைகோர்ப்பு - கட்சியினருக்கு ராகுல் புதிய கட்டளை

 
Published : Jul 06, 2017, 09:00 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசுடன் நிதிஷ் கைகோர்ப்பு - கட்சியினருக்கு ராகுல் புதிய கட்டளை

சுருக்கம்

No one should criticize Nitish Kumar said by ragul kandhi

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாரை யாரும் விமர்சிக்கக் கூடாது என்று கட்சித் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கத் தயார் என ஐக்கியஜனதா தளம் சூசகமாகத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அங்கம் வகிக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகா கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த நிதிஷ் குமார் மிகப்பெரிய வெற்றி பெற்றார். இதனால் மிகுந்த காங்கிரஸுடன் தோழமையுடன்,நெருக்கமாக நிதிஷ் குமார் இருந்தார். 

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம் நாத் கோவிந்த் பீகார் மாநிலத்தில் கவர்னராக இருந்தவர். இவர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டதும், நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்தார். இவரின் இந்த ஆதரவு காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

அதே சமயம், பீகாரில் பிறந்தவரும், முன்னாள் மக்களவை சபாநாயகருமான மீரா குமார் காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டும் அவருக்கு நிதிஷ் ஆதரவு அளிக்கவில்லை. இது குறித்து லாலு பிரசாத் யாதவ் பல முறை நிதிஷ் குமார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால், அவர் முடிவை திரும்பப் பெற மறுத்துவிட்டார். 

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், முதல்வர் நிதிஷ் குமாரை விமர்சிக்கத் தொடங்கினார். ஒரு சிந்தனையுடன் , ஒரு முடிவு எடுக்க வேண்டும், சிலர் பல சிந்தனையுடன், பல முடிவு எடுக்கிறார்கள் என்று நிதிஷ் குமாரை விமர்சித்தார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் நிதிஷ் குமாரை விமர்சிக்கத் தொடங்கினர். 

இந்த விஷயம் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு தெரியவந்ததும், பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவுத்ரியை அழைத்து பேசினார். அப்போது, முதல்வர் நிதிஷ் குமார் மீது கட்சியினர் யாரும் விமர்சனங்களை முன்வைக்க கூடாது என்று கண்டிப்புடன் தெரிவித்து விட்டார். 

நிதிஷ்குமாருக்கு எதிராக யாரும் விமர்சிக்க கூடாது என ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, ஐக்கியஜனதா தளம் கட்சி, துணை ஜனாதிபதி தேர்தலை ஒன்றாகச் சந்திக்க தயார் எனத் தெரிவித்துள்ளது. 

இது குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் கே.சி. தியாகி கூறுகையில், “ துணைஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுத்தால் நாங்கள் உறுதியாக கலந்து கொள்வோம். காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் துணைஜனாதிபதி வேட்பாளரையும் நாங்கள் ஆதரிப்போம்’’ எனத் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"