தமிழ்நாட்டுக்கு பெப்பே காட்டிய மத்திய அரசு; பட்ஜெட்டில் 0/0 !! பீகார், ஆந்திராவிற்கு கொட்டிக்கொடுத்த பாஜக

By Ajmal Khan  |  First Published Jul 23, 2024, 1:47 PM IST

3வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜக அரசு இன்று மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த நிலையில், தமிழகத்திற்கு ஒரு திட்டம் கூட அறிவிக்கப்படாதது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழகமும் பாஜகவும்

தமிழகத்தில் பாஜக கால் ஊண்ட பல திட்டங்களை செயல்படுத்தியது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களை கைப்பற்றியது. இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் பயணிக்க திட்டமிட்டிருந்த நிலையில்,அறிஞர் அண்ணா, ஜெயலலிதா தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மேலிடத்திடம் அதிமுக தலைவர்கள் புகார் தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

ஆனால் பாஜக தலைமை எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது. இதனையடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி அணியை உருவாக்கியது. அதிமுகவும் தனி அணியாக போட்டியிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கைப்பற்றியது.

முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்பார்ப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கால் பதிக்க நினைந்தது நடைபெறாமல் ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. இந்தநிலையில் மத்திய பட்ஜெட் அனைவரின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மீண்டும் பதவியேற்றுள்ள பாஜக அரசு பட்ஜெட்டில் என்ன புதிய அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எதிர்பார்ப்பையும் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன் படி மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நம்புவதாக கூறியிருந்தார்.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசு

இந்தநிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை, அதே நேரத்தில் மீண்டும் பாஜக அரசு அமைய உறுதுணையாக இருந்த பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு கூடுதல் நிதிகளை மத்திய அரசு தனது நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ளது.ஆந்திர தலைநகர் அமராவதி கட்டமைப்புக்கு 15,000 கோடி ஒதுக்கீடு. வரும் ஆண்டுகளில் கூடுதல் நிதியும் வழங்கப்படும்.

ஆந்திராவின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், தண்ணீர், எரிசக்தி, ரயில்வே மற்றும் சாலை ஆகிய உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.விசாகப்பட்டினம் - சென்னை தொழில் வழித்தடம் ஏற்படுத்தப்படும். பொருளாதார வளர்ச்சிக்கு மூலதன செலவினத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

மத்திய பட்ஜெட் 2024: ஆந்திரா, பீகாருக்கு அடித்த ஜாக்பாட்! கோடி கோடியாக வாரி கொடுத்த நிர்மலா சீதாராமன்!

click me!