டெபிட், கிரெடிட் கார்டு இனி தேவையில்லை…. “கான்டாக்ட்லெஸ் பேமென்ட்” வந்தாச்சு!

Asianet News Tamil  
Published : Sep 12, 2017, 03:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
டெபிட், கிரெடிட் கார்டு இனி தேவையில்லை…. “கான்டாக்ட்லெஸ் பேமென்ட்” வந்தாச்சு!

சுருக்கம்

no need credit card debit card will be introduce contact lens payments

கடைகளில் பொருட்கள் வாங்கினால், டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதற்கு பதிலாக ஸ்மார்மார்ட் போன் மூலம் ஸ்வைபிங் செய்து பணம் செலுத்தும் “கான்டாக்ட்லெஸ் பேமெண்ட்” விரைவில் வர உள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி இந்த கான்டாக்ட்லெக் பேமென்ட் முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்த உள்ளது.

கான்டாக்ட்லெஸ் பேமெண்ட் என்பது, ஸ்மார்ட் போனில் ஆப்ஸ் மூலம் செயல்படுத்தப்படும் முறையாகும். இன்டர்நெட் உதவியோடு, மிகவேகமாக பணத்தை பரிமாற்றம் செய்யும் வசதியாகும். 

கடைக்காரர் வைத்துள்ள ஸ்பைபிங் எந்திரத்தின் முன், ஸ்மார்ட்போனில் உள்ள இதற்கென இருக்கும் ஆப்ஸை காட்டி எடுத்துவிட்டால்,  எளிதாக பணம் பரிமாற்றம் ஆகும். இதற்காக “ஹாஸ்ட் கார்ட் எமுலேஷன்” எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நமது ஸ்மார்ட்போன், இல்லது நமக்கு கொடுக்கப்படும் கார்டில் பொருத்தப்பட்டுள்ள சிப் மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. ரகசிய குறியீடு எண் எதுவும் தேவையில்லை.

இது குறித்து எஸ்.பி.ஐ. கார்டு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் ஜசுஜா கூறுகையில், “ ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு பதிலாக கான்டாக்ட்லெஸ் பேமெண்ட் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல இந்தியாவில் செயல்படுத்த பாரத் கியூ.ஆர் கோட் செயல்படுத்த இருக்கிறோம். 

இதற்காக என்.எப்.சி. நிறுவனத்துடன் ஸ்டேட் வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது.  அடுத்த 2 ஆண்டுகளில் எங்களின் 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கான்டாக்ட்லெஸ் கார்டு வழங்கப்படும். இது மிகவும் பாதுகாப்பானது” என்றார்.

PREV
click me!

Recommended Stories

உனக்கு எங்க வீட்டு பொண்ணு கேக்குதா.. சாதி மறுப்பு திருமணம் செய்த சூரிய பிரகாஷ் ஆணவ கொலை
ஏப்ரல் 1 முதல் E20 பெட்ரோல்.. மைலேஜ் குறையுமா? ஓட்டுநர்கள் கவனத்திற்கு