புது 2000 ரூ நோட்டுக்களை கண்டுபிடிக்க முடியாது...!!! – ‘ரூபாய் நோட்டில் ஜி.பி.எஸ்.நானோ சிப் கிடையாது’

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 08:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
புது 2000 ரூ நோட்டுக்களை கண்டுபிடிக்க முடியாது...!!! – ‘ரூபாய் நோட்டில் ஜி.பி.எஸ்.நானோ சிப் கிடையாது’

சுருக்கம்

கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நோக்குடன் நேற்றிரவு முதல் இந்தியாவில் 500ரூபாய் மற்றும் 1000ரூபாய் நோட்டுகள்  செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு பதிலாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய நோட்டுக்களில் ஜிபிஎஸ் சிப் பொருத்தப்பட்டிருப்பதாகவும், இந்த சிப் செயற்கைக் கோள் உதவியுடன் சிக்னல்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் என்றும், இதன் மூலம் கருப்பு பணத்தை கண்டுபிடிக்க முடியும் என கூறப்பட்டது.

மேலும், இந்த புதிய தாள்களை பூமிக்கு கீழே 120 மீட்டர் ஆழத்தில் புதைத்தாலும் அந்த ஜிபிஎஸ் சிப் கருவிகள் சிக்னல்கள் மூலம் காட்டி கொடுத்துவிடும். எனவே பணம் பதுக்கலை தடுக்கலாம் என கூறப்பட்டது.


இது தொடர்பாக செய்தியாளர்கள் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு  ரிசர்வ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் அப்லானா கில்லாவலா பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, உலகில் எந்த ஒரு நாட்டிலும் இதுபோன்ற ஒரு தொழில்நுட்பமே நடைமுறையில் இல்லைஎன்றும், எனவே நம் நாட்டிலும் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியாது என அவர் தெரிவித்தார்.

புதிய தாள்களில் ஜி.பி.எஸ்.சிப் இல்லையெனில் எப்படி கருப்பு பணத்தை ஒழிக்க முடியும் என்றும், அப்படி இருக்கையில் 1000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டிய அவசியமே இல்லையே என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?