புது 2000,500 நோட்டுகளுக்காக மக்கள் 3 வாரம் காத்திருக்கணுமாம்..!!! - சொல்கிறார் அருண் ஜெட்லி

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 08:07 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
புது 2000,500 நோட்டுகளுக்காக மக்கள் 3 வாரம் காத்திருக்கணுமாம்..!!!  - சொல்கிறார் அருண் ஜெட்லி

சுருக்கம்

நேற்றிரவு முதல் இந்தியாவில் 500ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்  செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதை தொடர்ந்து 2 நாட்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.மையங்கள் இயங்காது என்றும், அதன்பின்னர் புதிய நோட்டுகள் நாளை மறுநாள் முதல் புழக்கத்திற்கு வரும் என கூறப்பட்டது.

இந்தநிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்வதன் மூலம், கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே கவலைப்பட வேண்டும் என்றும், பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் சட்டப்படி வங்கியில் டெபாசிட் செய்து வரி செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அரசின் நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழியும் என நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்த அவர், ரொக்க பணப்பரிவார்த்தனைக்கு பதில் வங்கி மூலம் பணப் பரிவர்த்தனை செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், சொத்தை கணக்கு காட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வருவதற்கு இன்றும் 3 முதல் 4 வார காலமாகும் என அருண் ஜெட்லி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Rs 12000 Scholarship: 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.12,000; இந்த அரசு ஸ்காலர்ஷிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?
Diwali Train Ticket Booking Opening: தீபாவளிக்கு ரயில்ல ஊருக்கு போறீங்களா?! முன்பதிவு தொடங்க போகுது.! மறந்துடாதீங்க.!