“ஐந்தாவது நாளாக பணம் இல்லை” – ஆத்திரமடைந்த மக்கள்...!!

First Published Nov 14, 2016, 2:18 AM IST
Highlights


பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து மக்கள் தங்களிடம் வைத்துள்ள உள்ள பழைய நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அனைத்து வங்கிகளும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

வங்கிகளில் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்த பின் பணம் தீர்ந்துவிட்டது என கூறி திருப்பி அனுப்பப்படுகின்றனர். மேலும், பெரும்பாலான ஏடிஎம்-களில் சரியாக பணம் கிடைக்காதாதால், பொதுமக்கள் தொடர்ந்து 5வது நாளாக வரிசையில் காத்திருந்து பணம் எடுத்து செல்கின்றனர்.

இன்று விடுமுறை நாள் என்பதால், அதிகப்படியான மக்கள், நீண்ட வரிசையில் வங்கி முன்பு காத்திருந்து தங்களது பழைய பணத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பணத்தை எடுப்பதற்காக நீண்ட வரிசையில் ஏடிஎம்கள் முன்பும் மக்கள் காத்திருக்கின்றனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் உள்ள ஏடிஎம்-களில் போதுமான பணம் இல்லை என்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதே நிலை நீடித்தால், பொறுமையை இழக்கும் மக்கள் வெளிமாநிலங்களான டெல்லி, மத்திய பிரதேஷ் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கடைகளை சூறையாடியதை போல், தமிழகத்திலும் கடைகள் சூறையாடப்படும் அபாயம் உள்ளது.

click me!