வெடிக்கிறதா புரட்சி…??? சூறையாடப்பட்ட கடைகள்...!!! - பொறுமையிழந்த மக்கள்

Asianet News Tamil  
Published : Nov 14, 2016, 02:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
வெடிக்கிறதா புரட்சி…??? சூறையாடப்பட்ட கடைகள்...!!! - பொறுமையிழந்த மக்கள்

சுருக்கம்

கடந்த 8-ஆம் தேதி நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்தார்.இதனையடுத்து, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் கடந்த 10-ஆம் முதல் வங்கிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு மக்கள் புழக்கத்திற்கு வந்தன.

கடந்த 9, 10 ஆகிய இரண்டு தேதிகளில் நாடெங்கும் உள்ள ஏடிஎம்-கள் இயங்கவில்லை, பின்னர், 11-ஆம் தேதி முதல் மீண்டும் ஏடிஎம்-கள் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டும், பெரும்பாலான ஏடிஎம்-களில் இன்றுவரை பணம் இல்லை. ஒருசில ஏடிஎம்-களில் மட்டும் பணம் கிடைக்கிறது. இதனால் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

டெல்லியின் பெரும்பாலான இடங்களில் உள்ள ஏடிஎம்களில் பணம் கிடைக்காத நிலையில், பொறுமையிழந்த மக்கள் டெல்லியில் உள்ள மெட்ரோ மாலில் அதிரடியாக நுழைந்து உணவு பொருட்களை அள்ளி சென்றனர்.

இதேபோல், மத்திய பிரதேச மாநிலம் யசோதா நகரில் உள்ள நியாய விலை கடையை சூறையாடிய பொதுமக்கள் கடையில் இருந்த கோதுமை உள்ளிட்ட பொருட்களை மூட்டை, மூட்டையாக அள்ளி சென்றனர்.

வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் நீண்ட நேரம் காத்திருந்தும் சரியாக பணம் மாற்ற முடியாமால் தவிப்பதால் பொதுமக்கள் இதுபோன்ற விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

உடற்கல்வி ஆசிரியருடன் சௌமியா.! வீட்டிற்கு வந்தும் எந்நேரமும் ஓயாமல்! விஷயம் தெரிந்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
தேங்காய் எண்ணெய் வாங்குபவர்களுக்கு ஷாக் நியூஸ்! விலை உச்சத்துக்கு போகப்போகுது! ஏன் தெரியுமா?