கவலை வேண்டாம்....ஜூன் 30 வரை ரெயில் டிக்கெட் உயராது.. புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்தியஅரசு

Asianet News Tamil  
Published : Apr 01, 2017, 09:47 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
கவலை வேண்டாம்....ஜூன் 30 வரை ரெயில் டிக்கெட் உயராது.. புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்தியஅரசு

சுருக்கம்

No hike in Rail fare

இன்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யப்படும், ரெயில் டிக்கெட்டுகளுக்கு ஜூன் 30-ந் தேதி வரை சேவை வரி பிடித்தம் செய்யப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்களிடையே டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும், மக்களுக்கு சலுகை அளிக்கும் வகையிலும், சேவைக்கட்டணத்தை கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதியில் இருந்து 2017,மார்ச் 31-ந்தேதிவரை ரத்து செய்வதாக அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில், அந்த தேதியை ஜூன் 30வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதுவரைடிக்கெட் கட்டணம் உயராது என நம்பலாம்.

இது குறித்து ரெயில்வே துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திடம் இருந்து, ஜூன் 30-ந்தேதி வரை சேவைக்கட்டணம் பயணிகளிடம் இருந்து ஆன்-லைன் முன்பதிவுக்கு வாங்க வேண்டாம் என உத்தரவு வந்தது. இதையடுத்து, ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவுக்கு நாங்கள் சேவைக்கட்டணத்தை ஜூன் 30வரை வசூலிக்கப்போவதில்லை’’ எனத் தெரிவித்தார். 

 ரெயில் டிக்கெட் முன்பதிவின் போது சேவைக்கட்டணமாக ரூ. 20 முதல் ரூ.40 வரை வசூலிக்கப்படுவது ஜூன் மாதம் வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட்உயர்வு அடுத்த 2 மாதங்களுக்கு இருக்காது. சேவைக்கட்டணத்தை ரத்து செய்ததன் மூலம், நவம்பர் 23 முதல் பிப்ரவரி 28வரை ரூ.184 கோடிவரை பயணிகளுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு ஏர்போர்ட் போனா இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க…படம், மேட்ச் எல்லாம் ஒரே இடத்தில்
ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்