சமானியரின் ‘சங்கை நெறிக்கும்’ விதிமுறைகள்… எஸ்.பி.ஐ. வங்கியின் ‘கெடுபிடிகள்’ நடைமுறைக்கு வந்தன

 
Published : Apr 01, 2017, 09:33 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
சமானியரின் ‘சங்கை நெறிக்கும்’ விதிமுறைகள்… எஸ்.பி.ஐ. வங்கியின் ‘கெடுபிடிகள்’ நடைமுறைக்கு வந்தன

சுருக்கம்

state bank of india

சமானியரின் ‘சங்கை நெறிக்கும்’ விதிமுறைகள்… எஸ்.பி.ஐ. வங்கியின் ‘கெடுபிடிகள்’ நடைமுறைக்கு வந்தன

பாரத ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ.) அறிவித்த சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாவிட்டால் அபராதம், ஏ.டி.எம்.களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் உள்ளிட்ட பல அறிவிப்புகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தன.

குறைந்த பட்ச இருப்பு தொகை எவ்வளவு?

மெட்ரோ நகரங்களில் இருக்கும் எஸ்.பி.ஐ. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள், குறைந்த பட்ச இ ருப்பாக ரூ.5 ஆயிரம் வைத்து இருக்க வேண்டும். நகர்புறங்களில் வசிப்போர் ரூ. 3ஆயிரம், சிறிய நகரங்களில் இருப்போர் ரூ. 2 ஆயிரம், கிராமங்களில் வசிப்போர் ரூ. ஆயிரம் இருப்புத் தொகை வைக்க வேண்டும்.

‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாவிட்டால்?

சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச இருப்பு தொகை இல்லாவிட்டால் ரூ. 100 அபராதம் மற்றும் சேவை வரி விதிக்கப்படும். இருப்புத் தொகை 75 சதவீதம் மட்டும் இருந்தால் ரூ.50 மற்றும் சேவை வரி விதிக்கப்படும். கிராமங்களில் ரூ.20 முதல் 50 அபராதம் விதிக்கப்படும்.

டெபாசிட் கெடுபிடி

சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் மாதம் ஒன்றுக்கு 3 முறை மட்டுமேடெபாசிட் செய்ய முடியும். 4-வது முறையில் இருந்து டெபாசிட் ஒன்றுக்கு ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஏ.டி.எம். விதிமுறை

எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்தில் மாதம் ஒன்றுக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும்  ரூ.10 கட்டணம். மற்றவங்கி ஏ.டி.எம்.மில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். சேமிப்பு கணக்கில் ரூ.25 ஆயிரம் இருந்து, எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில்3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் இல்லை.

எஸ்.எம்.எஸ். அலர்ட்

ஸ்டேட் வங்கி டெபிட் கார்டு வைத்து இதில் சராசரியாக ரூ.25 ஆயிரம்வரை பணம் வைத்து இருப்பவர்களுக்கு ஒவ்வொரு 3 மாதத்துக்கு ஒருமுறையும், எஸ்.எம்.எஸ்.அலர்ட் செய்திக்காக ரூ. 15 கட்டணம் வசூலிக்கப்படும்.

முக்கியமான விசயம்

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைய உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அன்ட்ஜெய்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட்பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத் , பாரதியமகளா பேங்் ஆகியவற்றிலும் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!