இந்தியாவுக்கு பாதுகாப்பு இல்லை..! மக்களே எச்சரிக்கையா இருந்துக்கோங்க அவ்ளோதான்..! சொல்வது நம்ம துணை ஜனாதிபதி..!

By Vishnu PriyaFirst Published Apr 24, 2019, 4:13 PM IST
Highlights

ஈஸ்டரில் இலங்கையை கிழித்துப் போட்ட தொடர் குண்டுவெடிப்பினால் தெற்காசிய பிராந்தியமே கிடுகிடுத்துக் கிடக்கிறது. குறிப்பாக அடுத்த குறியோ அல்லது, இதற்கு முந்தைய இலக்கிலோ இந்தியா இருந்திருக்கலாம் அல்லது இருக்கும்! என்றே தேசிய உளவுத்துறை நகம் கடித்தபடி சொல்கிறது.

ஈஸ்டரில் இலங்கையை கிழித்துப் போட்ட தொடர் குண்டுவெடிப்பினால் தெற்காசிய பிராந்தியமே கிடுகிடுத்துக் கிடக்கிறது. குறிப்பாக அடுத்த குறியோ அல்லது, இதற்கு முந்தைய இலக்கிலோ இந்தியா இருந்திருக்கலாம் அல்லது இருக்கும்! என்றே தேசிய உளவுத்துறை நகம் கடித்தபடி சொல்கிறது. 

இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதலை முடித்துவிட்ட நிலையில் எஞ்சியிருக்கும் அந்தப் படையினர் கடல் மார்கமாக அடுத்து இந்தியாவிற்குள்தான் தப்பி வந்திருப்பார்கள், அல்லது வருவார்கள் என்பது தேசிய கடலோரப்படையின் அவதானிப்பு. இதன் மூலம் தமிழகத்தில் அதிக அளவிலும் கேரளம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்களுக்கான அச்சுறுத்தல் பெரியளவில் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. 

ஏற்கனவே ‘இன்னும் கொஞ்ச நாள் மால்களுக்கு போக வேண்டாம், புதுப் படம் பார்க்க தியேட்டர் பக்கம் போக வேண்டாம், நெரிசலான நேரத்தில் கோயில்களுக்கு போக வேண்டாம், ஹெவி கூட்டம் இருக்கிற டூரிஸ்ட் ஸ்பாட்டுகளுக்கு போக வேண்டாம்.’ என்று மக்கள் பயந்து முடிவெடுத்திருக்கும் நிலையில், இந்திய அரசு நிர்வாகத்தின் மிக மிக முக்கிய மனிதரான துணை ஜனாதிபதி வெங்கயநாயுடுவே சில உண்மைகளை உடைத்துப் பேசி, மக்களை நடுநடுங்க வைத்துள்ளார். 

“இலங்கை சுற்றுலாதுறையை முடக்க வேண்டும் எனும் நோக்கத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. உலக அளவில் இந்தியா உட்பட, எந்த நாடுகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. உலக அளவில் பயங்கரவாத செயல்களை ஒழிக்க மிக கடுமையான நடவடிக்க எடுக்க வேண்டும். இந்தியாவில், பெங்களூரு மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை, பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.” என்று வெளிப்படையாக பேசியுள்ளார். 

இதை விமர்சிக்க துவங்கியுள்ள தேசியளவிலான எதிர்க்கட்சிகள் “நியூசிலாந்தில் கிறைஸ்ட் சர்ச் நகரில் கடந்த 15-ம் தேதி மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இலங்கை தேவாலயங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன  என்று இலங்கையின் ராணுவ இணையமைச்சர் விஜேவர்த்தனே கூறியுள்ளார். மேலும் ‘தாக்குதல் எச்சரிக்கை வந்தும் கூட, குண்டுவெடிப்புகளை தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு மக்களிடம் அரசு தரப்பில் மன்னிப்பு கோருகிறோம்.’ என்று அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே வெளிப்படையாக பேசியுள்ளார். 

இப்படி இருக்கையில், இந்திய துணை ஜனாதிபதி நாயுடுவோ, ‘இலங்கையின் டூரிஸத்தை சீர்குலைக்கவே இந்த சதி’ என்று சொல்லியிருப்பது என்ன கணக்கு? அண்டை நாட்டில் நடந்த அதிபயங்கர செயலுக்கான காரணத்தை இவர் வேறு திசையில் நகர்த்தி செல்வதோடு, இந்தியாவும் அச்சுறுத்தலில் உள்ளது எனவே மக்கள் எச்சரிக்கையாக இருந்துக்கோங்க! என்று கூறுகிறாரே அப்படியானால் இந்த மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பு ஏற்காதா? நாளையே சிறு அசம்பாவிதம் என்றாலும், மக்களைத்தான் அதற்கு பொறுப்பாளியாக்குவார்களா?” என்று பிரித்து மேய்ந்துள்ளனர்.

click me!