நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரதமர் மோடி இன்று பதிலுரை!

Published : Aug 10, 2023, 07:34 AM IST
நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரதமர் மோடி இன்று பதிலுரை!

சுருக்கம்

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று பதிலுரை ஆற்றவுள்ளார்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதித்து பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், குறுகிய கால விவாதம் நடத்த தயார் எனவும், மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிப்பார் எனவும் பாஜக அரசு கூறி வருகிறது.

இதனிடையே, ஜூலை 26 ஆம் தேதி மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருமாறு நோட்டீஸ் வழங்கினார். அதனை, இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆதரிப்பதாகத் தெரிவித்தன.

அந்த தீர்மானம் விவாதத்துக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதையடுத்து, ஆகஸ்ட் 8, 9 ஆகிய தேதிகளில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன் தினமும், நேற்றும் விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று பதிலுரை ஆற்றவுள்ளார். எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சியின் விவாதம் முடிந்த நிலையில், பிரதமர் மோடி இன்று பதிலுரையாற்றவுள்ளார். அப்போது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பார் என தெரிகிறது.

மணிப்பூரில் நடந்தது வெட்கக்கேடு.. அதை அரசியல் செய்வது அதைவிட வெட்கக்கேடு - அமித்ஷா ஆவேசம் !!

முன்னதாக, நேற்றைய விவாதத்தின் மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார். அப்போது, ‘மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டீர்கள்; இந்தியாவை கொன்று விட்டீர்கள்; நீங்கள் துரோகிகள். நீங்கள் தேசபக்தர்கள் இல்லை.’ என ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். இதற்கு ஆளும் பாஜக தரப்பிலும் ஆவேசமாக பதிலளிக்கப்பட்டது.

அத்துடன், நேற்றைய விவாதத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு சுமார் 2 மணி நேரம் பதிலளித்து பேசினார். அப்போது மணிப்பூர் உயர் நீதிமன்றமே கலவரத்து காரணம் என குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகளுக்கு அமளி மட்டுமே தேவையாக உள்ளது; விவாதம் தேவையற்றதாக உள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டினார். அவரது பதிலையடுத்து, மக்களவை இன்றைய தினம் 11 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது. மேலும், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 10ஆம் தேதி (இன்று) மக்களவைக்கு வருவார் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி