மக்களவையில் இன்று காங்கிரஸ் மற்றும் பாரத ராஷ்டிர சமிதி கட்சிகள் மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய ஆட்சி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சிகள் கொண்டு வந்து இருக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் குறித்த தேதியை மக்களவை சபாநாயகர் அறிவிப்பார். அன்றைய தினத்தில் விவாதம் நடைபெறும். மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகய் இதற்கான தீர்மானத்தை மக்களவை செயலாளரிடம் சமர்ப்பித்தார். இந்த இரண்டு தீர்மானங்களையும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொண்டார். தேதியை விரைவில் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற தனி தீர்மானத்தை பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் மக்களவை தலைவர் நாகேஷ்வர் ராவ் சமர்ப்பித்தார். இந்தக் கட்சிக்கு தலைவராக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இருக்கிறார்.
undefined
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் முடிந்த பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த தீர்மானம் வெற்றி அடையும் பட்சத்தில் ஆளும் பாஜக கட்சி ராஜினாமா செய்ய வேண்டியது இருக்கும்.
20 வருஷமா இப்படி நடந்ததே இல்ல... மத்திய அரசுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி எடுத்த அதிரடி முடிவு
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் முடிந்த பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த தீர்மானம் வெற்றி அடையும் பட்சத்தில் ஆளும் பாஜக கட்சி ராஜினாமா செய்ய வேண்டியது இருக்கும். ஆனால், இந்த தீர்மானம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆளும்கட்சியினர் மக்களவையில் மெஜாரிட்டியாக இருப்பதால் இந்த தீர்மானம் தோல்வி அடையும். சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவையில் வாசிப்பார். பின்னர் வாக்கெடுப்பு இருக்கும் அல்லது ஆதரிக்கும் உறுப்பினர்களை எழுந்து நிற்குமாறு கூறலாம்.
மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், நாங்கள் வாய்ப்பு கொடுக்கிறோம், விவாதிக்கலாம் வாருங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்து இருந்தார். ஆனால், இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
"இந்தியன் முஜாகிதீன் பெயரிலும், இந்தியா உள்ளது": எதிர்க்கட்சிகளின் கூட்டணியை கலாய்த்த பிரதமர் மோடி
மக்களவையில் அமித் ஷா நேற்று பேசிக் கொண்டு இருக்கும்போது, எதிர்க்கட்சியினர் மணிப்பூர், மணிப்பூர் என்று கூச்சல் எழுப்பினர். இவர்களுக்கு பதில் அளித்த அமித் ஷா, ''இங்கு குரல் எழுப்புபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசு மீது நலன் இல்லாதவர்கள், ஒத்துழைக்க மறுப்பவர்கள். தலித்கள் மற்றும் பெண்களின் நலனில் அக்கறை இல்லாதவர்கள். மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் வைத்துக் கொள்ளலாம் என்று நான் இரண்டு அவைகளின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன்'' என்றார்.
கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் துவங்கியது. ஆனால் இன்று வரை ஒருநாள் கூட அவை நடக்கவில்லை. மணிப்பூர் விவகாரம் குறித்த சர்ச்சையே நடந்து வருகிறது.