பாலஸ்தீனக் கொள்கையில் மாற்றமில்லை: மத்திய அரசு பதில்!

By Manikanda Prabu  |  First Published Dec 10, 2023, 11:08 AM IST

பாலஸ்தீனக் கொள்கையில் மாற்றமில்லை என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்


நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் பாலஸ்தீனம் தொடர்பான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? அப்படியானால், அதன் விவரங்களைத் தருக?; தற்போதைய இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த அரசாங்கத்தின் நிலைபாடு என்ன?” ஆகிய கேள்விகளை நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் எழுப்பினார்.

அதற்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். அதில், “ பாலஸ்தீனம் தொடர்பான இந்தியாவின் கொள்கை நீண்டகாலமாக நிலையாகவே உள்ளது. இந்தியா எப்பொழுதும் பேச்சுவார்த்தை அடிப்படையில் இரு நாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்வையே ஆதரித்து வந்துள்ளது.  இறையாண்மை கொண்ட, சுதந்திரமான  பாலஸ்தீனத்தை நிறுவ வேண்டும். பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பாக, அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், இஸ்ரேலுடன் இணக்கமாக, அமைதியுடன் அருகருகே வாழவேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

மேலும், “அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களையும்,  தற்போது நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் ஏற்பட்டு வரும் பொதுமக்களின் உயிரிழப்புகளையும் இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது. மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து நாங்கள் கவலையடைகிறோம், மேலும் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிகளின் மூலம் மோதலை அமைதியான முறையில் தீர்த்து வைப்பதற்கும், மோதலின் தீவிரத்தைக் குறைப்பதற்கும் அழைப்பு விடுத்துள்ளோம். மனிதாபிமான அடிப்படையில் போர் இடைநிறுத்தங்கள் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க  இருதரப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.” எனவும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் பத்திரிக்கையாளர் சவுமியா விஸ்வநாதன் தந்தை மரணம்!

பிரதமரும், வெளிவிவகாரத்துறை அமைச்சரும் இஸ்ரேலின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி உட்பட அந்தப் பிராந்தியத்திலும்,  உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களுடனும் பேசியுள்ளனர். G20, BRICS மற்றும் ‘குளோபல் சவுத்’ உச்சிமாநாடு உள்ளிட்ட  பல்வேறு சர்வதேச அரங்குகளிலும் பேசி மேற்கூறியவற்றை அவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

click me!