BBC Documentary Modi: டெல்லி ஜேஎன்யு-வில் பிரதமர் மோடி ஆவணப்படத்துக்குத் தடை: மாணவர்கள் போராட்டம், கல்வீச்சு

By Pothy RajFirst Published Jan 25, 2023, 1:13 PM IST
Highlights

BBC Documentary Modi: பிபிசி சேனல் தயாரித்த பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிடுவதற்கு தடைவிதித்து, இன்டர்நெட் இணைப்பைத் துண்டித்ததால், டெல்லியி்ல் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர், கல்வீச்சிலும் ஈடுபட்டனர்.

பிபிசி சேனல் தயாரித்த பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிடுவதற்கு தடைவிதித்து, இன்டர்நெட் இணைப்பைத் துண்டித்ததால், டெல்லியி்ல் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர், கல்வீச்சிலும் ஈடுபட்டனர்.

2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி சேனல் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் தயாரித்துள்ளது.  பிபிசி சேனல், தயாரித்துள்ள “ India:The Modi Question”  என்ற ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணி மகன் கண்டனம்

ஆனால் இந்த ஆவணப்படத்தை தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் திரையிட்டுள்ளனர். கேரளாவிலும் இந்த ஆவணப்படத்தை திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிட மாணவர்கள் முயற்சி எடுத்தனர். ஆனால், இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடைவிதித்து.

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணி மகன் கண்டனம்

ஆனால், நேற்று மாணவர்கள் மீது இரவில் மர்ம ஆசாமிகள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் திரண்டனர். அவர்கள் கூறுகையில் “ நாங்கள் செல்போனில் ஆவணப்படத்தை அமைதியாகப் பார்த்தோம். பல்கலைக்கழகத்தில் எந்த இடத்திலும் பிபிசி ஆவணப்படம் திரையிடப்படவில்லை. ஆனால், செல்போனில் படம் பார்த்தாலும்கூட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஏபிவிபி அமைப்பினர் மாணவர்கள் மீது கல்வீசித் தாக்குகிறார்கள்”எனத் தெரிவித்தனர்.

ஆனால், இதற்கு ஏபிவிபி மாணவர்கள் தரப்பில் மறுக்கப்பட்டது. நாங்கள் யார் மீதும் கல்வீசவில்லை என்று தெரிவித்தனர்.


இதையடுத்து, கல்வீச்சில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் திரண்டு நேற்று இரவு பல்கலைக்கழகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதன்பின் வசந்த் குஞ்ச் காவல்நிலையத்துக்கு நடந்து சென்று, கல்வீச்சு தொடர்பாக புகார் அளித்தனர்.

இதற்கிடையே பல்கலைக்கழக வளாகம் முழுவதும் இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் “ பல்கலைக்கழகத்துக்கு வரும் மின்தடத்தில் மிகப்பெரிய கோளாறு நடந்துள்ளதால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை சரி செய்யும் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளார்ள், வேறு எந்த நோக்கமும் மின் துண்டிப்புக்கு இல்லை.”எனத் தெரிவிக்கப்பட்டது.

குடியரசு தினத்தன்று மோடி ஆவணப்படம் திரையிட முடிவு!கேரள முதல்வருக்கு பாஜக வேண்டுகோள்!

பிபிசி ஆவணப்படத்தை மாணவர்கள் பார்க்கவிடாமல் தடுக்கவே மின்சார நிறுத்தம் செய்யப்பட்டதாக மாணவர்கள் கூறியபுகாருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பதில் அளிக்க மறுத்துவிட்டது. 

இதற்கிடையே பல்கலைகழகத்தில் உளள ஜேஎன்யுஎஸ்யு மாணவர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் “ பிபிசியின் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிட்டு சமூக ஒற்றுமையை நல்லிணக்கத்தை குலைக்கும் எந்த நோக்கமும் இல்லை. படத்தை திரையிடும் எண்ணம் இல்லை” எனத் தெரிவித்தது

ஜேஎன்யு- அனைத்து இந்திய மாணவர்கள் அமைப்பின் செயலாளர் மதுரிமா கூறுகையில் “ ஆவணப்படத்தை மாணவர்கள் செல்போனில் பார்த்தமைக்காக ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கல் கல்வீசித் தாக்கியுள்ளனர். சிலர் முகமூடி அணிந்து பிரதான வாயில்வழியாக பல்கலைக்கழகத்துக்குள் வந்து வன்முறையில் ஈடுபட்டனர்” எனக் குற்றம்சாட்டினார்.

ஆனால், இதை ஏபிவிபி அமைப்பினர் தொடர்ந்து மறுத்துள்ளனர். கல்வீச்சு சம்பவம்நடந்த இடத்தில் ஏபிவிபிஅமைப்பினர் யாரும் இல்லை. என மறுத்துள்ளனர்.


 

click me!