புதிய மருத்துவக் கல்லூரிகள்..! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த முக்கியமான உத்தரவு..!

First Published Sep 13, 2017, 5:51 PM IST
Highlights
No Application From Medical Colleges For Grant Of LOP For 2017 18


2017-2018-ம் ஆண்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறையான அடிப்படை வசதிகள் இல்லாத தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மறுத்தது. இதை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த தனியார் கல்லூரி ஒன்று, நடப்பாண்டிற்கான மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2017-18ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கையை அனுமதிக்கக்கோரி தொடரப்படும் வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் நடப்பாண்டில் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

click me!