அகமதாபாத் வந்தார் ஜப்பான் பிரதமர் - கட்டித்தழுவி வரவேற்றார் மோடி..

First Published Sep 13, 2017, 4:16 PM IST
Highlights
Japanese Prime Minister Shinzo Abe and his wife Aaye Abe arrived in Ahmedabad as a two-day state trip. Prime Minister Narendra Modi welcomed them and welcomed them.


2 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அவரது மனைவி அகே அபே அகமதாபாத் வந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். 

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையம் வந்த  அவரை  பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் வரவேற்றனர். 

ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேராக மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சாலை மார்க்கத்தில் காரில் ஜப்பான் பிரதமரும் மோடியும் செல்கின்றனர். அப்போது, காந்தி ஆசிரமத்தை ஜப்பான் பிரதமர் சுற்றிப் பார்க்கிறார்.

ஜப்பான் பிரதமர் வருகையையொட்டி டுவிட்டரில் அவரை வரவேற்று அந்நாட்டு மொழியில் பிரதமர் மோடி  உங்களை வரவேற்க ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடதக்கது. 

இன்று மாலை ஆமதாபாத்தில் இந்தியா- ஜப்பான் நாட்டு கூட்டம் நடக்கிறது. இதில் இரு நாட்டு பிரதமர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 

நாளை ஆமதாபாத்தில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் அபேயும் மும்பை- ஆமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரெயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகின்றனர். 
 

click me!