பீகார் தலைநகர் பாட்னாவில் ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவர் ஒருவர் அம்மாநில தலைநகர் பாட்னாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருமண நிகழ்ச்சி முடிந்து நேற்று இரவில் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தவரை இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளார்.
பர்சா பஜார் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் பெயர் சௌரப் என தெரியவந்துள்ளது. சௌரப் உடன் வந்த முன்மும் குமார் என்பவர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
undefined
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “திருமண நிகழ்ச்சி முடிந்து சௌரப், முன்மும் குமார் ஆகியோர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் அவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சௌரப்பின் தலையில் இரண்டு முறை அக்கும்பல் சுட்டுள்ளது. முன்முன் குமார் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சௌரப் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். முன்மும் குமார் ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.” என தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் பப்ளிக் டாய்லெட்டாக மாறிய அனுமன் கோயில்! வைரலாகும் வீடியோ!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.