nitish: bihar:பீகார்: நிதிஷ் குமாருக்கு ஜித்தன் மாஞ்சி ஆதரவு: பாஜகவுக்கு எதிராக கட்சிகள் ஒன்று சேரும்-அகிலேஷ்

By Pothy RajFirst Published Aug 9, 2022, 5:00 PM IST
Highlights

பீகார் முதல்வர் பதவியிலிருந்து விலகிய நிதிஷ் குமாருக்கு இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சித் தலைவர் ஜித்தன் ராம் மாஞ்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளார்.

பீகார் முதல்வர் பதவியிலிருந்து விலகிய நிதிஷ் குமாருக்கு இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சித் தலைவர் ஜித்தன் ராம் மாஞ்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளியேறிவிட்டதையடுத்து, பிஹாரில் பாஜக ஆட்சி கவிழந்துள்ளது.  

பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜினாமா: ஆட்சியை இழந்தது பாஜக

பீகாரில் 2020ம் ஆண்டு தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று, நிதிஷ் குமார் முதல்வராகினார்.  
 ஆனால், கடந்த சில மாதங்களாக பாஜகவு தலைவர்களுக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இதனால் பாஜகவுடனான நட்பை நிதிஷ் குமார் முறித்துக் கொள்ள முடிவு செய்தார்.  

இது தொடர்பாக முடிவு எடுக்க ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் முதல்வர் நிதிஷ் குமார் இல்லத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவது என முடிவு எடுத்தனர். 
இதையடுத்து, ஆளுநரைச் சந்தித்த   முதல்வர் நிதிஷ் குமார்  தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இதனால் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. பிஹாரில் நிதிஷ்குமார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க உள்ளன. இதனால் மகாகட்பந்தன் கூட்டணி மீண்டும் பிஹாரில் ஆட்சிக்கு வர உள்ளது. 

 

यह जोड़-तोड़ की राजनीति नहीं, अपनों का मिलन है, समाजवाद का सशक्तिकरण है, मतदाताओं का अपनापन है, जन सरोकार आधारित मजबूत महागठबंधन है! pic.twitter.com/vyv7IXiHcV

— Rashtriya Janata Dal (@RJDforIndia)

பீகாரில் நிதிஷ் பாஜக கூட்டணி உடைந்தது:ஆர்ஜேடியுடன் கூட்டு? தேஜஸ்வி துணை முதல்வர்

இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமாருக்கு, அவரின் முன்னாள் சிஷ்யரும், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஜித்தன் ராம் மாஞ்சி நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளார். ஜித்தன் ராம் மாஞ்சிக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். 

இதற்கிடையே, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வியாதவ், முதல்வர் நிதிஷ் குமார் இருவரும் லாலுபிரசாத் யாதவின் மனைவி ராப்ரிதேவியைச் சந்திக்க காரில் புறப்பட்டனர். 
கடந்த 3 நாட்களுக்கு முன்புவரை இருவரும் எதிர்க்கட்சிகளாக இருந்தனர். எதிரும்புதிருமாக இருந்தனர். 3 நாட்களில் தலைகீழாக மாறி, இருவரும் சேர்ந்து பயணிக்கிறார்கள். 

பிஹாரில் நடந்ததிடீர் அரசியல் மாற்றம் குறித்து சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில் “ இது நல்ல தொடக்கம். வெள்ளையனே வெளியேறு கோஷம் இந்த நாளில் ஒலித்தது, இன்று பீகாரில் பாஜகவே வெளியேறு ஒலிக்கிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் விரைவில் ஒன்று சேர்ந்து பாஜகவுக்கு எதிராக நிற்பார்கள் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பிஹாரில் சட்டப்பேரவை 243 உறுப்பினர்களைக் கொண்டது. இங்கு ஆட்சிஅமைக்க 122 எம்எல்ஏக்கள் ஆதரவு ஒரு கட்சிக்குத் தேவை. ஆனால், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில்இருந்து நிதிஷ் குமார் விலகிவிட்டார். 

சூடுபறக்கும் பீகார் அரசியல்: ஆளுநரைச் சந்திக்கிறார் நிதிஷ் குமார்: ஆர்ஜேடி, பாஜக திடீர் அவசரக் கூட்டம்

இதனால், தேசியஜனநாயக்கூட்டணியில் பாஜகவுக்கு 74 எம்எல்ஏக்கள், விகாஷீல் இன்சான் கட்சி(விஐபி கட்சி)4 என 78 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளன.

மகா கட்பந்தன் கூட்டணிக்கு நிதிஷ் குமார் வந்துள்ளதையடுத்து, அந்தக்கூட்டணி பலம் அதிகரித்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 75 எம்எல்ஏக்கள், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 43, காங்கிரஸ் கட்சிக்கு19, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி 12, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2, மார்க்சிஸ்ட் 2 எம்எல்ஏக்கள், இந்துஸ்தான் அவாமி மோச்சா(ஹெச்ஏஎம்)4 இடங்கள் உள்ளன.  மகாகட்பந்தன் கூட்டணியில் தற்போது 155 எம்எல்ஏக்கள் உள்ளனர். 

இப்போது நிதிஷ் குமார், ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணியுன் சேர்ந்ததால், 155 எம்எல்ஏக்களாக உயர்ந்து, ஆட்சி அமைக்க முடியும்.

click me!