"சாலை விபத்துக்களுக்கு இனி இஞ்சினியர்கள்தான் பொறுப்பு" - பகீர் கிளப்பும் நிதின் கட்காரி

 
Published : Apr 02, 2017, 12:44 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
"சாலை விபத்துக்களுக்கு இனி இஞ்சினியர்கள்தான் பொறுப்பு" - பகீர் கிளப்பும் நிதின் கட்காரி

சுருக்கம்

nitin katgari says engineers are volunteers for road accident

வாகன விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு, சாலைகள் அமைக்கும் இன்ஜினியர்களே பொறுப்பாவார்கள் என மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். இதுகுறித்து அவா கூறியதாவது:-

இந்தியாவில் வாகனங்கள் ஓட்டும் 30 சதவீதத்தினர் போலியான லைசன்ஸ் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க தொழில்நுட்ப ரீதியாக பதிவு செய்யப்பட்டு இ-சேவை மூலம் புதிய வடிவில் லைசன்ஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் சுய விவரத்தை உடனடியாக எடுத்துவிட முடியும். இதனால், போலி டிரைவிங் லைசன்ஸ் வைத்துள்ளவர்கள், உடனடியாக உண்மையான லைசன்ஸ் பெற்று கொள்ள வேண்டும். சிக்கி கொண்ட பிறகு, நடவடிக்கை கடுமையாக இருக்கும்.

மேலும், டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு, தேர்வு முடித்த 3 நாட்களில், வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் உரிமம் வழக்கப்படுகிறதா? என்பது கண்காணிக்கப்படும்.

வட்டார போக்குவரத்து அலுவலகம் 3 நாட்களில் லைசன்ஸ் வழங்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழிமுறை மூலமாக ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தை நடத்த முடியும்.

சாலை விபத்துகளால் ஏற்படும் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். இதற்கு, 50 சதவீதம் சாலை அமைக்கும் இன்ஜினியர்கள் பொறுப்பாகும். இன்ஜினியர்கள், தவறான சாலை வடிவமைப்புகள் செய்வதால், இதுபோன்று நடக்கிறது. இதனையும் நாம் விபத்துகளின் போது கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

பால் பொருட்களில் கலப்படம் அதிகரிப்பு! நாடு முழுவதும் ரெய்டு நடத்த FSSAI அதிரடி உத்தரவு!
ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!