
கேரள மாநிலம் பள்ளிபுரம் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கான முகாம் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கானோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு வீரர்கள் அனைவரும், சாப்பிட்டு முடித்து தூங்க சென்றனர். அப்போது சிலருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சிலர், குமட்டலுடன் வாந்தி எடுக்க சென்றனர். ஒருவர் பின் ஒருவராக சென்று கொண்டு இருந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து சுமார் 400 பேர், அப்பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 109 வீரர்கள் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.
தகவலறிந்ததும், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கேகே சைலஜா மருத்துவமனைக்கு சென்று அனுமதிக்கப்பட்டுள்ள வீரர்களை சந்தித்து, நலம் விசாரித்தார்.