நிதின்கட்காரி மகளின் பிரம்மாண்ட திருமணம்..!! - 10 ஆயிரம் வி.ஐ.பி.கள் வருகை... 50 தனி விமானங்கள்..!!!

Asianet News Tamil  
Published : Dec 04, 2016, 05:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
நிதின்கட்காரி மகளின் பிரம்மாண்ட திருமணம்..!! - 10 ஆயிரம் வி.ஐ.பி.கள் வருகை... 50 தனி விமானங்கள்..!!!

சுருக்கம்

நாக்பூரில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திருமண விழாவில் 10 ஆயிரம் விருந்தினர்கள் பங்கேற்றனர். வி.வி.ஐ.பி.கள் வருகைக்காக 50 தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

 

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் கேத்கியின் திருமணம், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்றது.இந்த திருமண விழாவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்-அமைச்சர்கள் விழாவி்ல் பங்கேற்றனர்.

முன்னாள் துணை பிரதமரும் பா.ஜனதா மூத்த தலைவருமான எல்.ேக.அத்வானி, மகராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் விழாவில் பங்கேற்றனர். மிக முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக 50 தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

இந்த திருமண விழா காரணமாக கடந்த 2 நாட்களில் நாக்பூரில் இருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு செல்லும் எந்த விமானத்திலும் டிக்கெட் கிடைக்கவில்லை.

அனைத்து டிக்ெகட்டுகளுமே திருமண விருந்தினர்களுக்காக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.

நிதின் கட்கரியின் மூத்த மகன் நிகில் திருமணம் கடந்த 2010-ம் ஆண்டு நாக்பூரில் நடந்தபோதும் இதேபோல் மிக முக்கிய பிரமுகர்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது கட்கரி பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவராக இருந்தார். கட்கரியின் மற்றொரு மகன் சரங்கிற்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது.

மணமகன்

நேற்று திருமணம் நடைபெற்ற கேத்கி, கட்கரியின் கடைசி மகள் ஆவார். மணமகன் ஆதித்யா, நாக்பூரை சேர்ந்த ரவீந்திர கஷ்கேடிகாரின் மகன் ஆவார்.

இவர், அமெரிக்காவில் ‘பேஸ் புக்’ நிறுவனத்தில் ‘சோசியல் நெட் வொர்க்கிங்’ பிரிவில் பணி புரிந்து வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?