ஆனந்த் அம்பானியின் திருமண பரிசாக துபாய் பாம் ஜுமேரியாவில் இருக்கும் ரூ.640 கோடி வில்லாவை திருமண பரிசாக அவரது தாயார் நிடா அம்பானி கொடுத்துள்ளார்
ரிலையன்ஸ் குழும தலைவர் தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதிக்கு ஈஷா என்ற மகளும், ஆகாஷ், ஆனந்த் என்ற இரு மகன்களும் உள்ளன. இதில், ஈஷா, ஆகாஷ் ஆகியோருக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்த நிலையில், கடைசி மகனான ஆனந்த் அம்பானியின் திருமணம் நடைபெறவுள்ளது.
ஆனந்த் அம்பானி, விரன் மெர்ச்சன்ட் என்ற தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் என்பவரை காதலிப்பதாக நீண்ட காலமாக தகவல் பரவி வந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் மும்பையில் உள்ள அண்டிலா இல்லத்தில் அதிகாரப்பூர்வமாக கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
உலகின் முதல் 10 பணக்கார பெண்கள்: இந்தியாவின் சாவித்ரி ஜிண்டால் எந்த இடத்தில் இருக்கிறார்?
ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை 12ம் தேதி திருமணம் நடக்கவுள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் தொழிற்சாலையுடன் கூடிய விலங்குகள் பூங்காவில் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடைபெற்றது. அதில், உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், பாலிவுட் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ஆனந்த் அம்பானியின் 2ஆவது திருமணத்துக்கு முந்தைய (Pre-Wedding) நிகழ்ச்சிக்கு சொகுசு கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இத்தாலியில் இருந்து பிரான்ஸ் வரை மே மாதம் 29ஆம் தேதி (இன்று) முதல் ஜூன் 1ஆம் தேதி வரை செல்லும் சொகுசு கப்பலில் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சி, பார்ட்டி நடைபெறவுள்ளது.
ஆனந்த அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அவர்களுக்கு துபாய் பாம் ஜுமேரியாவில் உள்ள ரூ.640 கோடி மதிப்புள்ள வில்லாவை திருமண பரிசாக அவரது தாயார் நிடா அம்பானி அளித்துள்ளார். உலகத்தரத்தில் அமைந்துள்ள சலூன், பார், ஸ்பா, 70 மீட்டர் தனி கடற்கரை, 10 படுக்கையறைகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகளுடன் 33,000 சதுர அடி கொண்ட துபாய் பாம் ஜுமேரியா கடற்கரை அருகே அமைந்துள்ள தனி வில்லாவானது அம்பானி குடும்பத்துக்கு 77 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.