நிர்மலா சீதாராமன் அறிக்கையில் ஏராளமான சந்தேகம் எழுகிறது’ - சீதாராம் யெச்சூரியின் அடுக்கடுக்கான கேள்விகள்

First Published Nov 18, 2017, 5:59 PM IST
Highlights
Nirmala Sitharamans report has a lot of doubts


ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த அறிக்கையில் ஏராளமான சந்தேகங்கள் எழுகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘டிசால்ட்’ என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் டிசால்ட் நிறுவனம், இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன் இணைந்து விமானங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. 

ரத்து
ஆனால், பா.ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஒப்பந்தத்தை 2015ம் ஆண்டு ஜூன் 30ந்தேதி ரத்து செய்தது. அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பிரான்ஸ் நிறுவனம் ரபேல் விமானங்களை தயாரிக்கும் வகையில் ஒப்பந்தத்தை மாற்றி அமைத்தது. 

காங்கிரஸ் ஆட்சியின் போது ஒருவிமானத்தின் விலை ரூ.526 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் போது ரூ.1,570 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு தனிமனிதருக்காக ஒப்பந்தம் மாற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். 

இதை மறுத்து அறிக்கை வெளியிட்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் போர் விமான ஒப்பந்தம் வெளிப்படையாக நடந்தது. 5 சுற்றுபேச்சு நடத்தியபின்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று விளக்கம் அளித்தார். 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூர் டுவிட்டரில் பல கேள்விகளை எழுப்பி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது- 

பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தைக் காட்டிலும், அதன் மீது ஏராளமான சந்தேகமும், கேள்விகளும் எழுகின்றன. 

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட 126 ரபேல் போர்விமான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலை, தற்போது பா.ஜனதா அரசு 36 போர் விமானங்களை கொள்முதல் செய்ய நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் விலை குறித்து அவர் ஏன் விளக்கவில்லை. விமானங்கள் விலை குறித்து அவர் ஏதும் குறிப்பிடவில்லை. 

36 ரபேல் போர் விமானங்களை வாங்கும்போது, இந்திய நிறுவனத்துடன் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வது குறித்து இல்லாதது ஏன்?.

கடந்த 2015, ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி பிரான்ஸின் டிசால்ட் நிறுவனத்துடன் ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் செய்யும் முன், பிரதமர் மோடி, அமைச்சரவையில் கூடி பேசி ஆலோசனை நடத்தினாரா?

ேமக் இன் இந்தியா திட்டம் குறித்து தீவிரமாகப் பிரசாரம் செய்துவரும் பிரதமர் மோடி, ரபேல் போர்விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில், உள்நாட்டு நிறுவனத்துடன் தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தை ஏன் செய்யவில்லை. 

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 

click me!